ஓடை நடை

வழி நெடுகிலும் உன் பயணம்
பூச்சொரியும் மரங்கள் ....
பூச்சூடிய நீ
பெண்ணா ??

உன் காயங்கள்
பாறைகள்
முட்கள்
பாவம் உன்
பாதங்கள் ......

முக்கல்
முனகல்
இவை உன்
சங்கீதங்கள் ....

பேதங்கள் ...
பேசுங்கள் ...
இது மனிதனின்
பாஷைகள்...

தோழிகள்
பறவைகள்
இனி கவலை என்ன ?
கூறுங்கள்?

மதம்,மாதம்
எனக்கு தெரியாத
வார்த்தைகள்

அங்கே பூக்காடு இருக்கிறது
இப்போது தழுவுகிறேன் பாருங்கள் ....

ஓரமாய் நிற்கும் க நிலவன்

எழுதியவர் : க நிலவன் (19-Mar-14, 6:36 pm)
Tanglish : odai nadai
பார்வை : 70

மேலே