தன்னம்பிக்கை

தன்னையே அழிக்கும் கதிரவன் வந்தாலும்
தினம் தினம் மின்னிசிரிக்கும் நிலவு
நாளை மலர்வோம் என்ற நம்பிக்கையோடு
தான் மறைந்து போகிறது
....
கதிரவன் போல் தோல்விகள் உன்னை சுட்டெரித்தாலும்
நிலவை போல நம்பிக்கையோடு
மலராய் உன் உழைப்பை மலர விட்டுக்கொண்டே இரு ....
..
உன் நேரத்திற்கு வியர்வையை விதைகலாக்கு
விதைகள் முளைக்கும் போது அதன் அழகு
எல்லோரையும் கவரும் பார்
நீயும் முளைக்கும் போது எல்லோரும்
உன்னையே வலம் வருவார்கள் மறவாதே
.....
மலையே தகர்த்தெறியும் அளவுக்கு
மனதில் வலிமை கொண்டவன் நீ...
கரம் இல்லாதவன் கூட
கரம் வரைந்து காட்டும் போது
நீ ஏன் உன் கரங்களால் வாழ்க்கையை வரையகூடாது ???

எழுதியவர் : sathish (20-Mar-14, 10:15 am)
Tanglish : thannambikkai
பார்வை : 827

மேலே