அநாதை தாய்

அய்யிரு திங்கள் அன்பாய் சுமந்து
அல்லல் பலவும் இனிதே கடந்து
ஈன்ற பொழுதின் வலியும் சேர்த்து
எல்லாம் மறந்தால் உன்னை கண்டால் ....

தவமாய் கிடந்து வரமாய் உன்னை
அழகாய் வளர்த்து ஆசை நிறைத்து
உதிரம் தன்னை பாலாய் தந்து
உன்உடலை தந்த தியாகத் தாயவள் .....

பட்டினி கிடந்து உறக்கம் மறந்து
ஈயும் எறும்பும் அண்டவிடாமல்
உடலை போர்த்தி உன்னை காத்து
உன்னை ஆக்கினாய் மனிதனாக ........

வியர்வை சிந்தி வெய்யிலில் உழைத்து
எலும்பு இளைக்க அவளும் இளைத்து
குடல் சுருங்கி முகம் கருகி
நீ கல்வி கண்டிட தன்னை இழந்தால் .......

உந்தன் வாழ்வை இலக்காய் நினைத்து
அவளின் வாழ்வை தியாகம் செய்து
இரவு பகல் எல்லாம் மறந்து
இலவு காத்த கிளியாய் ஆனால் .....

தன்னை பற்றிய நினைவை மறந்து
உன்னை பற்றியே வாழ்ந்த உயிரை
உந்தன் ஒருத்தன் நிம்மதிக்காக
உதறி வாழ்தல் சரியா மனிதா ?

அவளின் உடலின் அங்கம் வாங்கி
அவளின் குருதியில் உயிரை தாங்கி
வளந்து வந்த பாச மகனே
நீ வழி மறந்து போனது ஏனோ ........

இருட்டில் கிடந்த உந்தன் வாழ்வை
வெளிச்சம் காட்டியே அன்னை அவளை
இறக்கம் மறந்து துரத்தும் மனிதா
நீ இறக்கம் மறந்து மிருகம் தானே?

சோறுபோட்ட நாயும் கூட
சுற்றி திரியும் நம்மை நாளும்
நன்றி போற்றும் நாயை விடவே
நீ நலிந்து போனது ஏனோ மனிதா .....

ஊட்டி வளர்த்த அன்னையை நீயோ
உதறி தள்ளல் கொடிய செயல்தான்
உன்னை நீயும் திருத்தா விட்டால்
நாளை உனக்கும் அந்த நிலைதான் மனிதா ......

காண முடியா தெய்வம் அதனை
கண்ணில் காண்பாய் அன்னை வடிவில்
அவர் உள்ளலாம் நோகா அவளைகாத்து
உயந்து வாழ்வாய் உந்தன் வாழ்வில் ......

கோவில் உள்ள தெய்வங்கள் போலே
கொண்டு இருப்போம் அன்னையை வீட்டில்
முயற்சி செய்வோம் இன்று முதலே
முதியோர் இல்லம் தவிர்த்து வாழ ........

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Mar-14, 4:41 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : anaathai thaay
பார்வை : 236

மேலே