தாயுமானவள்

பத்துநாள் கொடிய காய்ச்சலில்
படுத்த படுக்கையான பிள்ளை
கண்விழித்துப் பார்க்கவில்லை;
வாய்திறந்து பேசவில்லை.
நோயின் தாக்கமா? அதில் வந்த தூக்கமா?
மருந்து தந்த மயக்கமா? அது தந்த கிறக்கமா?

நடுக்கம் நிறைந்த உள்ளத்தோடும்
நீர்மல்கிய கண்களோடும் அங்கு
தூக்கம் மறந்து காத்திருந்தாள் 'தாய்'
உணவு மறந்து போயிருந்தது வாய்

நள்ளிரவு கடந்த பொழுதில்
மெல்லப் பிள்ளை கண்விழித்தான்
பக்கத்தில் இருந்தவளைப் பார்த்து
வாயாரக் கூவினான் 'அண்டீ'

எழுதியவர் : குழலோன் (23-Mar-14, 6:53 pm)
சேர்த்தது : குழலோன்
Tanglish : thayumanaval
பார்வை : 238

மேலே