ஈரத் துளிகள் - கே-எஸ்-கலை

கழன்று விழும்
ஈரமுள்ள மரத்தில்
ஈரமற்ற இலை !
==
சட்டென உறிஞ்சும்
வியர்வை துளியை
காய்ந்த நிலம் !
==
கனவுகளின்
வயிறு நிறையும்
கானல் நீரால் ! ----------------- (சென்ரியு !)
==
கல்லும் கல்லும்
முகம் பார்க்கும்
வற்றிய நதியில் !
==
இரையின்றி திரும்பும்
காக்கையின் நினைவில்
குஞ்சுகளின் நினைவு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (24-Mar-14, 10:06 pm)
பார்வை : 460

மேலே