விதியின் விளையாட்டு11

ரிஷானியின் பெற்றோர் ஷிவானி வீட்டிற்கு வந்ததும் மகள்கள் இருவரையும் அழைத்து திருமண விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்தனர்.....

ஷிவானிக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறோம், திங்கள் கிழமை நம்ம ஷிவானியை பார்க்க வருகிறார்கள்! அதனால் இருவரும் லீவு போடுங்கள் என்று சொன்னதும்.... சரி என்று இருவரும் தலையாட்டினர்.......!


ரிஷானிக்கு மனதிற்குள் பேரு சந்தோஷம் ஆனால் ஒன்று மட்டும் கேள்வி குறியாக இருக்க?

அதையும் அப்பாவிடம் கேட்டுவிட்டாள்!!!!!!

"அப்பா ஷிவானி அக்காவுக்கு 2வருடங்கள் திருமணம் செய்யக்கூடாது என்று ஜாதகம் பார்க்கும் போது சொன்னீர்கள் அல்லவா...?

ஆனால் இப்போது உடனே பார்க்க சம்மதிக்கிறீர்கள் என்று தனது மனதில் பட்டதை கேட்டாள்!

ஓ அதுவாடா கண்ணா!

மனோகர் எனது நெருங்கிய நண்பன் வெளியில் வைத்து உங்களை பார்த்திருக்கிறான் பிடித்ததும் நேரடியாகவே வந்து என்னிடம் கேட்டான்,

என்னால் மறுத்து பேச இயலவில்லை அதான் ஜாதகம் எதுவும் வேண்டாம் என்று விருப்பம் தெரிவித்தேன் என்று அப்பா சொன்னார்.

சரிப்பா மனோகர் மாமா பையனும் ரொம்ப நல்லவர், நம்ம அக்காவுக்கு ஏற்றவர்தான், அழகாகவும் இருக்கிறார் பேசி முடியுங்கள் என்று ரிஷானி சொல்ல? ஷிவானி வெட்கத்தில் சிரித்து விட்டு உள்ளே சென்றாள்....!


அப்பொழுது ரிஷானியின் தாய் மெல்ல தன் கணவரிடம் வந்து "என்னங்க ஜாதகம்...."என்று சொல்ல ஆரம்பித்ததும் அதெல்லாம் ஒன்றுமில்லடி மனோகர் ஜாதகம் எதுவும் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....,


அதுமட்டுமில்லாமல் பையனும் ரொம்ப நல்லவன் நம்ம குடும்பத்திற்கு தகுந்த அளவில் வசதி படைத்தவர் என்று புகழ.......


சரிங்க ஆகுற வேலைய பார்ப்போம் இன்னும் ஒருநாள் தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு தனது வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.

வெகு நாட்களுக்கு பிறகு ஷிவானியும் ரிஷானியும் பேச ஆரம்பித்தனர்,,,,,

இதான் சரியான நேரம் மதனைப்பற்றி அக்காவிடம் சொல்லி அக்காவின் ஐடியாவையும் கேட்போம் என்று நினைத்தாள் ரிஷானி......

மதனை பற்றி சொல்ல ஆரம்பித்தவள் ஒன்று விடாமல் அனைத்தையும் சொல்லி முடித்தும் விட்டாள்.

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள் ஷிவானி பேச்சு முடியும் தருணத்தில் ரிஷானி ஷிவானியின் முகத்தைப்பார்த்தாள்...கோவம் கலந்த தோரணையில் இருந்தவள் ஓங்கி கன்னத்தில் ஓர் அறைவிட்டாள்.........!


அப்படியே கன்னத்தை பிடித்தவள் கண்கள் சிவக்க கண்ணீருடன் ஷிவானியை வெறித்து பார்த்தாள்,

கண்டுகொள்ளாத ஷிவானி போய் அறையின் கதவை இறுக்கமாக அடைத்தாள்.

தன் அறை கதவை திறந்து வெளியே வந்த மனோஜ் சோபாவில் அமர்ந்துகொண்டு....

தந்தை இப்படி செய்து விட்டாரே ரிஷானியை எனக்கு ரொம்ப புடிக்கும் என்று அறிந்தும் ஷிவானியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறாரே என்ன செய்ய என்று யோசித்துக்கொண்டிருந்தான்........!



ரிஷானியை நன்றாகத்தெரியும்,திறமையானவள், அழகானவள், அன்பானவள் இப்படி நிறைய சொல்லலாம்....... அவள் அக்கா எப்படியோ?????என்று ஏகப்பட்ட எண்ணங்கள்????????


அப்படி இருக்கும் போது அவன் தந்தை ஒரு போட்டோவை கொண்டு அவன் முன் போட்டார்...






விதி தொடரும்

எழுதியவர் : ப்ரியா (25-Mar-14, 1:50 pm)
பார்வை : 234

மேலே