நிம்மதி
நான் தூங்குகிறேன் நிம்மதியாக
என் தூக்கத்தை நிறுத்த அலாரமும் இல்லை
என்னை தட்டி எழுப்ப ஆளும் இல்லை
பலருக்கு நடுவில் நான் உறங்கி கொண்டிருந்த போதிலும், குறட்டை சத்தமும் இல்லை, கொசு கடியும் இல்லை. மழை பெய்தாலும் எழுந்திருக்க மாட்டேன், இடி இடித்தாலும் அலற மாட்டேன்,
புழல் அடித்தாலும் அசைய மாட்டேன்.
சொர்கத்திலும் காணாத உறக்கம்.
நான் தூங்குகிறேன் நிம்மதியாக சுடுகாட்டில் ஒரு
பிணமாக......