வேட்டையாடும் ,நாட்டை யாளும் சிங்கம்

கண்ணுனது கயல் என்றால்
கவர்வது
நிஜம்தானே !

புயல் என்று புரிந்தால்தான்
புறமோடிப்போவார்கள்!

இடை உனது கொடி என்றால்
தொட்டுப் பார்க்க
துணிவு கொள்வர் ,

படமெடுக்கும் பாம்பென்றால்
பார்த்தருகில்
வருவாரோ ?

நடை உனது நளினம் என்றால்
நற்செய்தி
சொல்லுமன்றோ ?

நிலமதிர நீ
நடந்தால்
நினைப்பவர்கள்
நிற்பாரோ நின்னெதிரில் ?

மார்மீது சடை போட்டால்
மயங்குகிறாள் மாது என்பான் ,

பிண்ணிய
சர்ப்பமென
புறமுதுகில் தவழுமுடி
கண்ணியம் கூறிவிடும் !

சிங்கம்,
பெண்சிங்கம் .
வேட்டையுமாடும்,
நாட்டையும் ஆளும் !

தங்கம்,
தமிழ் சங்கம் .
கவரிமான் இந்த
காவியத் தலைவி !

ஹாய் ,
கண்ணியம்
காக்கும்
காவியத் தலைவி!!

எழுதியவர் : படைகவி பாகருதன் (28-Mar-14, 7:20 pm)
பார்வை : 582

சிறந்த கவிதைகள்

மேலே