எதுவும் இல்லாதது எதுவும் இல்லை...
*எதுவும் இல்லாதது*
*எதுவும் இல்லை..*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍏
மலரில்
மணம் இருந்தால்
முள்ளில்
கூர்மை இருக்கிறது.....
கனியில்
இனிப்பு இருந்தால்
காயில்
புளிப்பு இருக்கிறது....
சூரியனில்
வெப்பம் இருந்தால்
சந்திரனில்
குளிர்ச்சி இருக்கிறது....
பகலில்
வெளிச்சம் இருந்தால்
இரவில்
இருள் இருக்கிறது.....
விண்ணில்
வெட்டவெளி இருந்தால்
மண்ணில்
புல்வெளி இருக்கிறது....
மேலே
மேல் இருந்தால்
கீழே
கீழ் இருக்கிறது.....
மேட்டில்
உயர்வு இருந்தால்
பள்ளத்தில்
தாழ்வு இருக்கிறது.....
சிரிப்பில்
மகிழ்ச்சி இருந்தால்
அழுகையில்
அமைதி இருக்கிறது.....
தென்றலில்
சுகம் இருந்தால்
புயலில்
புதுமை இருக்கிறது...
பிறப்பில்
ஆக்கம் இருந்தால்
இறப்பில்
அழிவு இருக்கிறது.....
எதுவும் இல்லாதது
இவ்வுலகில்
எதுவும் இல்லை.......!!!
*கவிதை ரசிகன்*
🍏🍎🍏🍎🍏🍎🍏🍎🍎🍏🍎