மரங்களின் பயம்
மரங்களின் பயம்
இப்பொழுதெல்லாம்
எங்கள் மனம்
ஆயுதங்களுடன் யாரையாவது
பார்த்து விட்டால்
குலை நடுங்கி
போகிறது
கத்தியோ அறுவாளோ
கோடாரியோ
அதை விட
பெரும் மலைகளாய்
இயந்திர வண்டிகள்
என்னை கடந்து
போகையில்…
நான் மட்டுமல்ல
என் அருகில்
நிற்கும் எல்லோருமே..!
யாரையும் தொல்லை
படுத்தாமல் ஓரமாய்
நாங்கள் ஒதுங்கி
நின்றாலும்
சாலை விரிவு
படுத்துகிறேன்
என்று காரணம்
காட்டி
எங்களை வெட்டி
வீழ்த்த வந்து
விடுகிறார்கள்
அன்றாடம் செத்து
செத்து தான்
பிழைத்து கொண்டிருக்கிறோம்
மனிதர்களை கண்டு
அவர்களுக்கு நாங்கள்
எப்பொழுதும்
உணர்வோ உயிரோ இல்லாத
இனங்கள் என்று
நினைத்து
கொண்டிருப்பதால்