வரிவிதிப்பின் அளவுகோல் - 2

தொழில்முறை வரிகேட்டு
தொந்தரவு செய்யா(த)
தேசங்களும் பூமியில் உண்டு!

தொந்தி சுருங்கி செத்தவரையும்
தோண்டி எடுத்து வரிக்கேட்கும் - துர்
தேசங்களும் பூமியில் உண்டு!

வரி,
ஆட்சியாளர்களின் நெறி
அளவறிந்தே பறி
அதுவே சரி

பொதுவுடைமை நாடுகளும்
போர்க்கொடி ஏந்தி
வரி தர மறுத்து
புரட்சி செய்யும் யுகத்தில்

கல்வியையும், மருத்துவத்தையும்
கடைவிரித்து தனியாருக்கு
காசுக்கு விற்ற உங்களுக்கு

நாங்கள்

கட்டுகின்ற வரியே மிகுதி
காணும் வருவாயின் பெரும் பகுதி

இன்னும் வரி கேட்டால்

காலம் எங்களை
கொண்டுசேர்க்கும் சமாதி

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (18-Sep-24, 3:25 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 14

சிறந்த கவிதைகள்

மேலே