வரிவிதிப்பின் அளவுகோல்

வெண்ணைக்கும் வரியென்பார்
வெறும் ரொட்டிக்கும் வரியென்பார்

வெண்ணையுள்ள ரொட்டியென்றால்
வேறொன்று வரி என்பார்

வேந்தர் அவர் ஈட்டும் வரி
வேகும் புண்ணில் பாயும் ஈட்டி

நேர்முகமாய் சிலதென்பார்
மறைமுகமாய் பலதென்பார்

ஏழைமுகம் பார்த்து வரியிடு என்றால்
ஏனோ பாராமுகம் கொண்டிடுவார்

மலரின் மகரந்தத்தில்
மதுகுடிக்கும் வண்டைப்போல்

மன்னரவர் ஈட்டும்வரி
மெல்லியதாய் வேண்டுமென்றார்

வலியோரை வாழ்வித்து
வயக்காட்டு உழவரின்

வாழ்வாதாரம் பறிக்கின்ற
வரியின் அளவுகோல்

இதுவென்று யார்சொன்னார்?

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (18-Sep-24, 3:22 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 24

மேலே