இடுக்கண் களைவது மட்டுமல்ல நட்பு - 3

கட்டுசோறு கட்டிவந்து
கதைகள் பேசிஉண்டோம்

கலையாத கனவுகளோடு
கல்லூரியை கடந்தோம்

திரைகடல் ஓடி திரவியம்தேடி
திசைக்கொன்றாய் பிரிந்தோம்

தொலைதூர தேசங்களில்
தொடர்பற்று கிடந்தோம்

திருமணம், திருவிழாக்களில்
தேடியே இணைந்தோம்

தேதியும், விடுப்பும்
தேர்ந்தெடுத்தே சேர்ந்தோம்.

கடமைகளை கப்பலேற்றி
கரை கொண்டுசேர்ந்தோம்

கடந்தகால நட்போடு
கண்ணீரும் கலந்தோம்

வைகறையில் கரம் பிடித்து
வசந்தம் வரை இருந்து விட்டு

புயற்காற்று மாலை வந்தால்
புறங்காட்டி செல்வதா நட்பு? - இல்லை

சில்லறைகளை தொலைத்து விட்டு
சொந்தங்களை உதறி விட்டு

கல்லறைக்கு நான் சென்றாலும்
கரம் பிடித்து வருவதுதானே நட்பு

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (18-Sep-24, 3:20 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 26

மேலே