இடுக்கண் களைவது மட்டுமல்ல நட்பு - 2

"தேரோட்டி மகன்" என்று
துரோணரும் மறுத்து விட

செழுமை வீரத்தின் தரம்கண்டு
சேர்த்து கொண்டவன் துரியன்.

ஆருயிர் நண்பன் இவனென்று,
"அங்க" தேசத்து அரியனைத்தந்து,

அரவணைத்தவனின் அன்புக்கு
அடிமைப்பட்டே கிடந்தான் கர்ணன்

அன்னை குந்தி அழைத்தபோதும்,
அஞ்சோடு ஒன்றாய் நிலென்றபோதும்,

செஞ்சோற்று கடன் பெரிதென்றான்
செருக்களத்தில் சேர்ந்தே நின்றான்

"தன்னுயிர் பிரியும்" முன்னே
"உன்னுயிர் பிரியாது" என்றே

சங்கல்பம் செய்து தந்தே
சத்தியத்தை காத்து நின்றான்.

இடுக்கண் களைவது மட்டுமல்ல
இன்னுயிரை ஈன்றேனும் காப்பது

கற்பிலும் உயர்நிலை நட்பென்று
காலங்கள் சொல்லும் நீதிசொன்னான்.

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (18-Sep-24, 3:19 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 8

சிறந்த கவிதைகள்

மேலே