இடுக்கண் களைவது மட்டுமல்ல நட்பு - 1
தாயிடம் சொல்ல மறந்த
காயங்களும் உண்டு
தாரத்திடம் சொல்ல மறுத்த
ரகசியங்களும் உண்டு
தமயனிடம் சொல்ல முடியாத
தகவல்களும் உண்டு
தங்கையிடம் சொல்ல கூடாத
(வருமான) தரவுகளும் உண்டு
பெற்ற பிள்ளையிடம் பேசக்கூடாத
பேச்சுகளும் உண்டு
உறவுகளிடம் கொள்ள முடியாத
உரிமைகளும் உண்டு
உற்றநண்பனிடம் மட்டும் - அத்தனையும்
உளறி கொட்டியதும் உண்டு
உள்வாங்கும் அத்தனையும்
உன்னோடே இருக்குமென்ற
உளமார்ந்த நம்பிக்கையும் உண்டு
இடுக்கண் களைவது மட்டுமல்ல
இடுகின்ற இதயத்து செய்திகளை
இடித்தே எவர் கேட்டாலும்
இயம்பிட மறுப்பதும்
இனிதென ஆகும் நட்பில்