புதுவையில் ஓர் கல்வெட்டு தினம்

ஈரோடு தமிழன்பனின் அவர்களின் 80 ஆம் பிறந்தநாள் விழா .நூல் வெளியீடு விருதளிப்பு ஆகியவை 23-03-2014 அன்று புதுவையில் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது

கவிஞன் வார்த்தைகளின் தாகத்தை அறிந்தவன் .
வார்த்தைப் பெருங்கோவிலின் ரகசியத்தை அறிந்தவன் ' என்கிறார் புதுமைப்பித்தன் .அப்படிப்பட்ட கவிஞர் களில் ஒருவர்தான் அமிர்தகணேசன் (அகன் )அய்யா
அவர்கள் .கவிதையை ஒரு சமுதாய செயல்பாடாக செயல்படுத்துகின்றார் .

ஒருமுறை காரல்மார்க்ஸ் சொன்னார் .எதன்
பொருட்டு ஒரு பட்டுப்பூச்சி தன ரசத்தை பட்டிழைகளாய் பின்னிக்கொண்டிருக்கிறதோ அதன் பொருட்டே மில்டனும் இழந்த சொர்க்கத்தைப் படைத்தார் என்று .அப்படி சில மனங்களில் சதா கவிநெசவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது .வலைகள் அறுபடும் பட்டிழைகளுக்காக கூட்டுப்புழுக்கள் கொள்ளப்படும் என்றாலும் பட்டுப்பூச்சி வலைபின்னிக் கொண்டே இருக்கிறது .அறுதல் ,
அழிதல் பற்றிய அக்கறை இன்றி பின்னுதல் ஒன்றே பிறப்பின் இயல்பாக .இத்தகைய இயல்புடையவர்தான் நம் அகன் அய்யா அவர்களும் .

புதுவையில் விவேகானந்த பள்ளியின் விழா
அரங்கின் உள்ளே நான் நுழைந்த போது மணி 9.15 ,மேடையில் ஒரு மின்னல் .அது அகன் அய்யாதான் .நான் வணக்கம் சொல்லி உ என
ஆரம்பித்தேன் .அவர் உடனே உமாபாரதிதானே .
நலமாம்மா என விசாரித்தார் .நான் மனம் நெகிழ்ந்தேன் .அவரிடம் நான் அலைபேசியில் பேசிய குரலை வைத்தே அடையாளம் கண்டுவிட்டார் என்பதை உணர்ந்தேன் .எவ்வளவு உன்னதமான மனிதர் இவர் என வியந்தேன் .இருக்கையில் அமருமாறு கூறினார் சென்று அமர்ந்தேன் ..

தோழமைகளின் வருகைக்காக காத்திருந்தேன் .
ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் .அகன் அய்யா அவர்கள் தோழமைகளை முன் இருக்கைகளில் வந்து அமருமாறு கூறினார் பிறகு அனைவரையும் அறிமுகப்படுத்தினார் .
நம் தோழமைகள் சாந்தி ,சியாமளா ராஜசேகர் ,புலமி ,தாரகை ,பிரியா அனைவரையும் சந்தித்து
புன்னகையுடன் வணக்கங்களை பரிமாறிக்கொண்டேன் .

திரு .கோ.பி .அய்யா ,திரு கன்னியப்பன் அய்யா திரு .பொள்ளாச்சி அபி திரு ஜோசப் ஜூலியஸ் ,
திரு அகர முதல்வன் ,திரு .கவிஜி ,திரு .அகத்தியன் திரு.நேரு ஆகியோர்களின் வணக்கத்துடனான அறிமுகங்கள் .

என் அன்புத்தங்கை சுதாவும் ,தோழமை சந்தோஷ்குமார் வராததில் எனக்கு மிகுந்த மனவருத்தமே .உள்நாட்டில் வெளிநாட்டில் வசிக்கும் மற்ற தோழமைகளை பார்க்க முடியவில்லையே என்ற மனவருத்தமும் மிகுந்தது ...

இறைவணக்கத்துடன் விழா ஆரம்பிக்கப்பட்டது .
மேடையில்தமிழ்சான்றோர்கள்ஒவ்வொருவராக
பேசினார்கள் .பின்பு இசைப்பாடியும் ,கவிதை வாசித்தும் நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டினார்கள் .

கவிதை வாசிப்பிற்கு பின் விருதளிப்புகளும் (வாழ்நாள் சாதனையாளர் விருது ),புத்தக வெளியீடும் பெருந்தகை ஈரோடு தமிழன்பன்
அய்யா அவர்களின் மணிக்கரங்களினால் அவரவர்க்கு வழங்கப்பட்டது .பின் ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்களின் சொற்ப்பொழிவு
அறிவுரைகளுடன் கூடியதாக செம்மையாக இருந்தது .

விழா மேடையில் திரு அகன் அய்யா அவர்களும் .திரு பொள்ளாச்சி அபி அவர்களும் இங்கும் அங்குமாக நடைபயின்று விருதுகளையும் ,நூல்களையும் வழங்க உறுதுணையாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள் .இந்த வயதிலும் அகன் அய்யா அவர்கள் சுறுசுறுப்புடன் துள்ளல் நடையுடன் அனைத்துப் பணிகளையும் ஆற்றிக்கொண்டிருந்தார் .நான் உண்மையில் வியந்து போனேன் ..

விழா முடிந்தப்பின் அனைவரும் உணவருந்தி விட்டு தொழமைகளிடம் விடை பெரும் போது மனதிற்குள் ஒரு இறுக்கம் மெல்ல சூழ்ந்தது .மீண்டும் அனைவரையும் எப்போது சந்திப்போம் என்று .அகன் அய்யா அவர்களிடம் விடைபெறும்போது அவர் அனைவரையும் பார்த்து என் குடும்பத்தை பார்த்த மகிழ்வு எனக்கு என்றார் .மீண்டும் ஒரு நாள் இதுப்போல் .............

எங்கெங்கோ கிடந்த முத்துக்களைஎல்லாம் ஒன்று திரட்டி அதை முத்தாரமாக்கி அதற்கு மேலும் மெருகூட்டி ஒளிப்பெற செய்வது என்பது அவ்வளவு சாத்தியமானது அன்று .அதை சாதித்து காட்டியுள்ளார் அகன் அய்யா அவர்கள் ...உண்மை வெறும் புகழ்ச்சியில்லை ....
அகன் அய்யாவிற்கும் இந்த விழாவினை நடத்த உறுதுணையாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் ...

மேலும் இங்கே எங்களுக்கு எழுத இடம் அளித்து
நட்பு பாலத்தை உருவாக்கி இப்படி ஒரு விழா நடக்கமுக்கிய காரணியாக இருந்த இந்த எழுத்து தள நிர்வாகி உயர் திரு இராஜேஷ் அவர்களுக்கும் இத் தளத்தினை நடத்த தமிழினை வளர்க்க உற்ற துணையாக இருக்கும் அத்தனை நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ...

மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த அன்பு கலந்த நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் ...

தமிழ் வாழ்க ! வளர்க !

உமாபாரதி

எழுதியவர் : umamaheshwari kannan (28-Mar-14, 11:19 pm)
பார்வை : 186

மேலே