எழுத்துப் பிழை

"தலைவரு ஏன்யா ரொம்ப சோகமா இருக்காரு...?"


" போஸ்டர்ல ஒரு சின்ன எழுத்துப் பிழையில உண்மையெல்லாம் வெளிவந்துருச்சுங்கிற கவலைதான்"


"சின்ன எழுத்துப் பிழையா...என்னையா அது?"


"நாட்டுக்காகவே வாழ்ந்து,நாட்டுக்காகவே உயிரையும் விடத் தயாராக இருக்கும் தியாகச் செம்மல்" என்று இருக்க வேண்டிய இடத்துல "நோட்டுக்காகவே வாழ்ந்து, நோட்டுக்காகவே உயிரையும் விடத் தயாராக இருக்கும் தியாகச் செம்மல்" அப்படின்னு அடிச்சு ஒட்டிட்டாங்க..அதான்....

எழுதியவர் : உமர் ஷெரிப் (29-Mar-14, 1:55 pm)
பார்வை : 441

சிறந்த நகைச்சுவைகள்

மேலே