விஞ்ஞானம்

5ஆம் வகுப்பு:
டேய்..எங்க வீட்டு குழிப்பணியாரம்
உனக்க்காகத்தான்டா கொண்டு வந்தேன்..

12ஆம் வகுப்பு:
வீட்ல ரொம்ப கஷ்டம்டா
உன்கிட்ட பேசுனா மனசு சந்தோஷமா இருக்கு..

கல்லூரி மூன்றாம் ஆண்டு:
நீ கூடவே இருடா
அப்பதான் என்னால நிகழ்ச்சில நல்லாப் பேச முடியும்..

இப்பொழுது அவன்:
டேய்..கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுடா..

நண்பனின் திருமண வரவேற்பு இமெயிலில் வந்தது..
அவன் இத்தாலியில் நான் சவுதியில்..
விஞ்ஞானம் சுருக்கியது உலகை மட்டுமல்ல..
நம் நட்பையும் சேர்த்துத்தான் நண்பா..

எழுதியவர் : Alagarsamy (29-Mar-14, 5:56 pm)
சேர்த்தது : Visiri
Tanglish : vignaanam
பார்வை : 166

மேலே