Visiri - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Visiri |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 16-Mar-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 4 |
என் கடிகாரத்திற்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே..
உன்னைக் காண நிற்கும் தருவாயில் அது நேரம் தாழ்த்துவதால்..
வானவில்லுக்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே..
உன் தாவணியோ என்று அணைக்கச் செல்ல அது மறைந்து சென்று என் மனதை வதைத்ததால்..
நிலவுக்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே..
உனக்குப் போட்டியாக உன் முகச் சாயல் கொண்டிருப்பதால்..
இதை எழுதிக் கொண்டிருக்கும் போதே..
என் பேனாவிற்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே..
உன் பெயரை நான் எழுத அது மை கொண்டு முத்தமிடுவதால்..
உன் பச்சைக்கல் தோடு..
என்றும் என் மனதோடு..
நான் கருவிலே உருவான போது
பெண்ணாய் பிறப்பேனென்று
யாரும் ஆருடம் சொல்லலையோ
குங்குமப்பூ குடிக்கலையோ
பாட்டி அவள் சொல்லலையோ
பாவி நீயும் கேட்கலையோ?
பகலிலே பிறந்தாலும்
இருட்டா பிறந்தேன்னு
சொந்த பந்தம் பேசலையா
சுத்தி நின்னு சிரிக்கலையா?
கடலை மாவு, பயத்தமாவு
பேபி சோப் இத்யாதி...
சந்தையிலே விற்கலையா
உன் சிந்தைக்கு தான் தோனலையா?
கிடா வெட்டி படையல் போட்டு
குல சாமிக்கு பூசப் போட்டு
ஆசையா நீ வச்சப் பேரு
அய்யோ அது விளங்கலையே
வீதியில சந்தையில
விளையாடப் போகயில
கருப்பின்னு ஒரு பேரு
கப்புன்னு தான் ஒட்டிக்கிச்சு...
செவத்த பிள்ளை கூட்டத்தில
சேர்ந்து விளையாட
கருத்தப் புள்ள எனக்கு தான்
அய்யோ
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய
நண்பர்களின் முகப் புத்தகப் பக்கங்களில்
பத்தாவது முறை
லைக் பட்டனை அழுத்தும்போது தான்
சட்டென்று மனம் உரைத்தது...
என் மனைவியின் சமையலுக்கு
இன்னும் ஒரு முறை கூட
நான் லைக் சொன்னதில்லையே..
5ஆம் வகுப்பு:
டேய்..எங்க வீட்டு குழிப்பணியாரம்
உனக்க்காகத்தான்டா கொண்டு வந்தேன்..
12ஆம் வகுப்பு:
வீட்ல ரொம்ப கஷ்டம்டா
உன்கிட்ட பேசுனா மனசு சந்தோஷமா இருக்கு..
கல்லூரி மூன்றாம் ஆண்டு:
நீ கூடவே இருடா
அப்பதான் என்னால நிகழ்ச்சில நல்லாப் பேச முடியும்..
இப்பொழுது அவன்:
டேய்..கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்துடுடா..
நண்பனின் திருமண வரவேற்பு இமெயிலில் வந்தது..
அவன் இத்தாலியில் நான் சவுதியில்..
விஞ்ஞானம் சுருக்கியது உலகை மட்டுமல்ல..
நம் நட்பையும் சேர்த்துத்தான் நண்பா..
நண்பர்களின் முகப் புத்தகப் பக்கங்களில்
பத்தாவது முறை
லைக் பட்டனை அழுத்தும்போது தான்
சட்டென்று மனம் உரைத்தது...
என் மனைவியின் சமையலுக்கு
இன்னும் ஒரு முறை கூட
நான் லைக் சொன்னதில்லையே..