ஜெ ஜெயசூர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெ ஜெயசூர்
இடம்:  சீர்காழி
பிறந்த தேதி :  20-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Oct-2017
பார்த்தவர்கள்:  311
புள்ளி:  35

என் படைப்புகள்
ஜெ ஜெயசூர் செய்திகள்
ஜெ ஜெயசூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2020 4:35 pm

தன் முன்பு தேம்பி தேம்பி அழும்
மகனை ஆற்றுப்படுத்த முடியாமல்
ப்ரீசர் பாக்சில் அடைப்பட்டு இருக்கும் அப்பா...

:-ஜெ.ஜெயசூர்

மேலும்

ஜெ ஜெயசூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2020 8:45 pm

சிக்னலுக்கு காத்திருக்கும்
வாகனங்களில்
புகை மட்டும் நிற்காமல் போகிறது பின்னோக்கி...

:-ஜெ.ஜெயசூர்

மேலும்

ஜெ ஜெயசூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2020 8:43 pm

கதவை திறங்கள்
கல்லறை பூக்களும்
கருவறை வந்து
உங்கள் கடவுளை
அலங்கரிக்கட்டும்
கடவுள் கோபித்துக் கொள்ளமாட்டார்.

:-ஜெ.ஜெயசூர்

மேலும்

ஜெ ஜெயசூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2020 8:41 pm

கொடியில் காயும்
அவளின் வண்ணமில்லா புடவையில்
வண்ணத்து பூச்சிகளின் நடனம்.

:-ஜெ.ஜெயசூர்

மேலும்

ஜெ ஜெயசூர் - ஜெ ஜெயசூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2017 8:44 am

நான் அவளிடம் காதலை சொன்னதும்
அவள் நம்பவில்லை
நான் கவிஞனாக இருப்பதால் என்னவோ!!!

மேலும்

அவனுக்குள்ளும் ஓர் அழகான இதயம் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 11:42 am
ஜெ ஜெயசூர் - ஜெ ஜெயசூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2017 12:05 pm

உன்னை பார்க்கும் போது மௌனம் காட்டாதே உன் விழிகளால் பேசிவிடு.

உன் அருகில் வருகையில் ஓடிப் போகதே ஓரம் நின்றுவிடு.

உன் எதிரே வருகையில் தரை பார்க்காதே தலை நிமிர்ந்துவிடு.

உன் இதழை ரசிக்கையில் விரலால் மூடாதே அக்கணம் வீணை மீட்டிவிடு.

உன் பார்வையில் பாம்பாக தெரிந்தேனோ பயந்து போகிறாய் பாவமடி நான் பாலகனடி.

உன்னை அழைக்கையில் என் குரலை அலறல் என்று அஞ்சினாயோ அலறல் இல்லையடி அது என் அன்பு குரலடி.

உன் பாதம் பட்ட மண்ணை சட்டை பையில் போட்டதும் பைத்தியம் என்று நினைத்தாயோ பைத்தியம் இல்லையடி உன் பக்த்தன் நானடி.

உன் மூக்குத்தி கல்லின் ஒரு துகள் கொடுத்துவிடு கோவில்

மேலும்

நன்றி நண்பா 11-Nov-2017 6:36 pm
உன் அருகில் மரணம் வரை மண்புழுவாய் நான் வாழும் வரம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Nov-2017 6:07 pm
ஜெ ஜெயசூர் - சுரேஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2017 12:01 am

இயலாமையை தாங்கிட
இதயத்தில் துளையுண்டு
பெண்ணே!
நீ இல்லாமையை
இயற்றிட என் விதியின் இயர்பியலில்
இடம் தேடுகிறேன்...
எத்தனை நிலவுகளில்
விடை தேட...
வளர்வதும்! தேய்வதும்!
தேய்ந்து பின் வளர்வதும்...
மனதின்
காயங்கள் எம்மாத்திரம்!
பதில்களை தேடிப்பிடித்திடும்
முன்னமே
கேள்விகளை மாற்றிவிடுகிறது
வாழ்க்கை!

மேலும்

நன்றி 08-Nov-2017 8:59 pm
நன்றி.. 08-Nov-2017 8:58 pm
கடைசி இரண்டு வரி மிக சிறப்பு நண்பா 08-Nov-2017 7:58 pm
தேடலும் முடிவும் வாழ்க்கையில் மட்டும் ஓரிடத்தில் தான் அமைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Nov-2017 6:39 pm
ஜெ ஜெயசூர் - Visiri அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2017 8:08 pm

உன் பச்சைக்கல் தோடு..
என்றும் என் மனதோடு..

மேலும்

சிறப்பு 08-Nov-2017 7:55 pm
குறைகளையும் அன்பால் நிறைகளாக மாற்றும் வாழ்க்கை மரணம் வரை அழகானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 9:28 pm
ஜெ ஜெயசூர் - கௌடில்யன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Oct-2017 11:51 pm

ஓடி விளையாடப் பாப்பா - உனக்கு
ஒருவரும் இல்லையா பாப்பா?
வாடி நிற்காதே பாப்பா! - நீ
வாக்கிங் தினமும்போ பாப்பா!
*******
புத்தகம் படிப்பதுதான் படிப்பு - எனப்
புரியாமல் பேசுவார் பாப்பா!
சத்தியம் படிப்பதுதான் படிப்பு! - நீ
சார்ந்துநில் பெரியோரைப் பாப்பா!
*******
படித்துப் பட்டம்பெற்ற உடனே - சிலர்
பறப்பார் வெளிநாடு பாப்பா!
கிடைத்த வாய்ப்பில்நீ உயர்ந்து - நாட்டைக்
கீர்த்தி அடையச்செய் பாப்பா!
*******
உணவே மருந்தாகும் பாப்பா! - நீ
உண்ணுமுன் யோசிப்பாய் பாப்பா!
கனவே காணச்சொன்னான் கலாம்தான்! - அது
கண்டு பிடிப்பின்தாய் பாப்பா!
*******
மஞ்சள் பூசிக்குளி பாப்பா! - நீ
மருதாணி மறக

மேலும்

நன்றி தீபிகா சுக்கிரியப்பன்! 05-Dec-2017 10:33 am
அருமையான வரிகள் .....இன்றைய சமுதாயம் பின்பற்ற வேண்டிய உண்மைகள் .....வாழ்த்துக்கள் 04-Dec-2017 1:25 pm
நன்றி பவித்ரா சந்திர சேகர் ! 30-Oct-2017 3:47 pm
அருமையாக உள்ளது கவிதை .வாழ்த்துக்கள் 27-Oct-2017 3:51 pm
ஜெ ஜெயசூர் - ஜெ ஜெயசூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2017 11:38 pm

கரைப் புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தை கரம் கொண்டு தடுத்திடு.
எரி மலை குழம்பினை கிண்ணத்தில் அள்ளும் நெஞ்சத்தைக் கொண்டிடு.
உரை பனி மலையையும் உடல் உஷ்ணத்தால் உருகச் செய்திடு.
எட்டுத்திக்கு எல்லையையும் எட்டிப்பிடித்திடும் எண்ணம் கொண்டிடு.
கொட்டும் மழைக் கொண்டு சிறு கொள்ளிடம் செய்திடு.
நடுக்கடலில் தூண்டில்ப் போட்டு நீலதிமிங்கலம் பிடித்திடு.
சந்திரனைத் தொட்டுப் புது சாயம் பூசிடு.
சுடும் சூரியனை நீருற்றி அணைத்திடு.
வில் அம்பு எய்து விண்மீன் பிடித்திடு.
இளைஞேன உன் முயற்சியால் இவை அனைத்தும் செய்திடு.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே