இளைஞனே முடியும்

கரைப் புரண்டோடும் காட்டாற்று வெள்ளத்தை கரம் கொண்டு தடுத்திடு.
எரி மலை குழம்பினை கிண்ணத்தில் அள்ளும் நெஞ்சத்தைக் கொண்டிடு.
உரை பனி மலையையும் உடல் உஷ்ணத்தால் உருகச் செய்திடு.
எட்டுத்திக்கு எல்லையையும் எட்டிப்பிடித்திடும் எண்ணம் கொண்டிடு.
கொட்டும் மழைக் கொண்டு சிறு கொள்ளிடம் செய்திடு.
நடுக்கடலில் தூண்டில்ப் போட்டு நீலதிமிங்கலம் பிடித்திடு.
சந்திரனைத் தொட்டுப் புது சாயம் பூசிடு.
சுடும் சூரியனை நீருற்றி அணைத்திடு.
வில் அம்பு எய்து விண்மீன் பிடித்திடு.
இளைஞேன உன் முயற்சியால் இவை அனைத்தும் செய்திடு.

எழுதியவர் : ஜெ.ஜெயசூர் (25-Oct-17, 11:38 pm)
Tanglish : ilainyane mudiyum
பார்வை : 808

மேலே