நினைத்ததை முடிக்க முடிந்தால்
நினைத்ததை முடிக்க முடிந்தால்
நீதானடா சரித்திரம்
விழும் என்று நினைத்துவிட்டால்
வேர்-விழுதிருந்தும் பயனில்லை;
முடியும் என்று நினைத்துவிட்டால்
மூச்சிருக்கும்வரை கவலையில்லை;
தோல்விகள் பல வந்தால்
துவண்டுபோய்விடாதே!
வெற்றிகள் பல கண்டால்
உன்னையே நீ மறந்தும்போய்விடாதே!
நாளைய உலகின் நாயகன் நீ
மாயையைக்கண்டு மயங்கிவிடாதே!
காட்டாற்று வெள்ளம் நீ
தடைகளைக்கண்டு பயந்துவிடாதே!
முள்மீதும் நடை என்றால்
முழுதாய் செல் - பின்வாங்காதே..
வலியின்றி வாழ்வில்லை
செல்ல வழியுண்டு - என்றும் நீ வாடாதே!
முயற்சியுடன் மோது
தோல்விகள் உடைந்தோடும்
இலக்கு நோக்கி ஓடு
வெற்றி கை சேரும்
கலங்கரையின் வெளிச்சமாய் இரு
உயரத்தில் இருந்து உதவிடு
பாற்கடலில் நீ நீந்தும் நேரம்
முத்துக்கள் உன்னை தேடி வரும்
உன்னிலிருக்கும் வெளிச்சம்
உதயமாகும் நேரம்
உலகமே உன்னை தேடி வரும்…