தமிழா

கடவுள் அவன்
படைப்புதனில் சிறந்தது,
மனிதப்படைப்படா மனிதா......
ஆனால்,
அதனை உணர நம் மனம்
ஏனோ மறுக்குதடா தமிழா!!!!!
துன்பமும் இன்பமும்
வாழ்வினில்
சரிபாதியடா மனிதா....
ஆனால்,
இன்பத்தை மட்டும்
ஏனோ நம் மனம்
எதிர்ப்பார்க்கிறதடா தமிழா!!!!
வேண்டாம் என்றதும் எரித்துவிட....
உயிர் ஒன்றும்
வெறும் காகிதம்
இல்லையடா மனிதா....
உயிர் ஓர் அன்புக்கல்லடா மனிதா!
செதுக்க செதுக்க அது,
சிற்பமாகுமடா தமிழா!!!!
மரணத்தருவாயில்
நம் உயிர்க்கூட
நமது இல்லையடா மனிதா....
அதனால்,
இருக்கும் வரை இல்லாதவர்களுக்கு
உதவி செய்வோமடா தமிழா!!!!
கண்ணிலே
வீரம் வேண்டுமடா மனிதா....
கொடுமைகளை,
நீ தூரவிரட்ட வேண்டுமடா தமிழா!!!!
தற்கொலை எண்ணத்தை
புதைத்து விடுடா மனிதா.....
தன்னம்பிக்கையை மட்டும்
உன் மனதினில்
விதைத்து விடுடா தமிழா!!!!!
நாளைய பாரதம்
நம் கையினில் தமிழா!!!
துணிந்து எழுந்திடு மனிதா....
வெற்றியும் நமதே தமிழா!!!