வினாக்களை தேடிடும் விடைகள்
இயலாமையை தாங்கிட
இதயத்தில் துளையுண்டு
பெண்ணே!
நீ இல்லாமையை
இயற்றிட என் விதியின் இயர்பியலில்
இடம் தேடுகிறேன்...
எத்தனை நிலவுகளில்
விடை தேட...
வளர்வதும்! தேய்வதும்!
தேய்ந்து பின் வளர்வதும்...
மனதின்
காயங்கள் எம்மாத்திரம்!
பதில்களை தேடிப்பிடித்திடும்
முன்னமே
கேள்விகளை மாற்றிவிடுகிறது
வாழ்க்கை!