கனியாத கனி இரண்டு -கங்கைமணி

இயற்க்கை என்னும் "பிரிட்ஜ்க்குள்"
எடுத்துவைத்த இரு மலர்கள்.,
கொத்தோடு இருக்குது,
குழலோடு சிரிக்குது.
கரம்தொட்ட நீருக்கோ
காய்ச்சல்தான் அடிக்குது.

இரு வெள்ளை தோலுக்கு
இடி மின்னல் வலுக்குது.
இவள் ஈர இதழ் கண்டு
இளநெஞ்சம் துடிக்கிது.

பால்வெள்ளம் பருகென்று
பதமாத்தான் இருக்குது
பார்வைக்குள் நாவொன்று
புதிதாக முளைக்குது.

குளமென்னும் கண்ணாடி
நிழல் தொட்டு இரசிக்குது.
பூவுக்கும் குழலுண்டா ?!!!
வியப்பாத்தான் இருக்குது.

உடைக்குள்ளே அடைபட்ட
ஒய்யார சிலை ரெண்டை.
காட்சிக்கு வைத்திங்கு-
காண்!..என்று போனோர்யார்?!

கவிபாடும் மனதொன்றை
களவாடும் அழகிரண்டை
கரம்பற்றி செல்வோர்யார்? -காம
கணை கொண்டு வெல்வோர் யார் ?!
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (8-Nov-17, 12:24 am)
பார்வை : 183

மேலே