காதலன் வேண்டுதல்

உன்னை பார்க்கும் போது மௌனம் காட்டாதே உன் விழிகளால் பேசிவிடு.

உன் அருகில் வருகையில் ஓடிப் போகதே ஓரம் நின்றுவிடு.

உன் எதிரே வருகையில் தரை பார்க்காதே தலை நிமிர்ந்துவிடு.

உன் இதழை ரசிக்கையில் விரலால் மூடாதே அக்கணம் வீணை மீட்டிவிடு.

உன் பார்வையில் பாம்பாக தெரிந்தேனோ பயந்து போகிறாய் பாவமடி நான் பாலகனடி.

உன்னை அழைக்கையில் என் குரலை அலறல் என்று அஞ்சினாயோ அலறல் இல்லையடி அது என் அன்பு குரலடி.

உன் பாதம் பட்ட மண்ணை சட்டை பையில் போட்டதும் பைத்தியம் என்று நினைத்தாயோ பைத்தியம் இல்லையடி உன் பக்த்தன் நானடி.

உன் மூக்குத்தி கல்லின் ஒரு துகள் கொடுத்துவிடு கோவில் கோபுரத்தில் வைப்பதற்கு.

நீ கடித்து துப்பும் நகத்தை கொடுத்துவிடு நாள் தோறும் பூஜை செய்வதற்கு.

உன் தும்மலில் சிதறும் துளி நீரை கொடுத்துவிடு தீர்த்தமென்று பருகுவதற்கு...

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (11-Nov-17, 12:05 pm)
Tanglish : kaadhalan venduthal
பார்வை : 237

மேலே