மனம் கொடு

மனம் கொடு மனம் கொடு பெண்ணே என் மனதில் சேர்த்து விட.
வழி கொடு வழி கொடு விழியே உன் இதயத்தில் நுழைந்து விட.

நிதம் நிதம் யோசித்தேன் நித்திரை தொலைந்து போனது.
மணம் மணம் என்று யாசித்தேன் மல்லிகை மயங்கி போனது.

ஓ......காதலி என் மூச்சினில் நீயும் கலந்துவிட்டாய்.
ஓ......பெண்ணொளி என் உயிரை நீயும் உருட்டிவிட்டாய்.

இருள் மழையில் நனைகிறேன் பௌர்ணமி குடையாய் வருகிறாய்.
அனல் மழையில் நனைகிறேன் பனி குடையாய் வருகிறாய்.

ஓ... காதலி உன் அழகில் உதிரம் உறைந்ததடி.
ஓ....பெண்ணொளி உன் விழிகளில் இதயம் தொலைந்ததடி.

உன் மூச்சில் கலந்திடவே என் இதயம் கொடுத்துவிட்டேன்.
என் மூச்சை தொடங்கிடவே உன் இதயம் கேட்கிறேன்.

நீ அழுவது என் மனதுக்கு பிடிக்கலையே.
நான் வருவது உன் கணவுக்கு பிடிக்கலையே.

என்ன நானும் செய்திடனும் சொல்லி விடு என் உயிரே.
நானும் செய்து முடித்து விட்டால் என்னை ஏற்று கொள்வாயா..

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (11-Nov-17, 11:35 am)
Tanglish : manam kodu
பார்வை : 167

மேலே