மலர்ந்த இதழ்
*மலர்ந்த இதழ்*
கருத்த விசும்பு
குளிர்ந்த நீர்
விரிந்த கிளைகள்
மலர்ந்த இதழ்
துளிர்த்த குருத்து
வானெழும் சிறகு
சுழன்றடிக்கும் வால்
எழும் கதிர்
விழும் துளி
தளிர்கொள் பனி
சுமைதாங்கிய நத்தை
பிஞ்சு கன்னம்
கனிந்த கைகள்
இருளொளிர் கருவறை
இருந்தருளும் இறை
சில வேளைகளில்
ஒரு சொல்லும்....!
- கிரி பாரதி