பெண்ணே
தினம் வாயாடும் பெண்ணே
அமைதி கொள்வது ஏனோ
உன் நினைவுகளை கொண்டது எது
கணம் முழுதும் தின்றது எது
தென்னகம் பிறந்த சின்னவன்
அன்பால் உன்பால் வந்தவன்
உறவாய் நட்பை கொண்டவன்
ஓர் சொல் நவின்றாலும் மகிழ்பவன்
தேனிதழே நீ மலர்ந்து விடு
மாரியாய் நீயும் பொழிந்து விடு
உயிரே நீயும் மாறி விடு
இருப்பேன் நானும் வாழ்த்திக்கொண்டே
உன்னால் நானும் மகிழ்ந்து கொண்டே