சஞ்சீவிபர்வதத்தின் சாரல்
இந்தத் தலைப்புத்தொடரே பல சிக்கல்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. இதுதான் கதையின் செயற்களமாக அமையப்போகிறது என எதிர்பார்க்கத் தொடங்குகிறோம். எனவே இது ஒரு சஸ்பென்ஸ் உருவாக்கும் தலைப்பு.
ஏன் இந்தத் தலைப்பை அளித்தார் பாரதிதாசன்? பாரதிதாசன் கூடியவரை தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்துபவர். அவ்வாறிருக்க சஞ்சீவி பர்வதம் என்னும் இரு சமஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்தக் காரணம் என்ன?
இச்சொற்றொடரை சஞ்சீவி பர்வதம்+அத்து+இன்+சாரல் என்றும் பிரிக்கலாம். அத்து என்பது சாரியை (சொற்கள் சேரும்போது இடையில் வரும் துணையலி). இவ்வாறு பிரித்தால் இனி மையான சாரல் என்று பொருள்படும். இம்மலைச்சாரலில் இனிமை தவழ்வதாக, இனிய செயல்கள் நிகழ்வதாகவே பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.
இது ஒரு கலாச்சார, புராணிகச் சங்கேதம். ஆனால் கம்பராமாயணத்தில் இச்சொல் ஆளப்படவில்லை. அதில் மருந்துமலை என்றே குறிக்கப்படுகிறது. ஆனால் பௌராணிக மரபில், கதை கூறும்போது சஞ்சீவி பர்வதம் என்றே சொல்லப்படும். எனவே பொதுவாசகர்களுக்கு இச்சொல் மிகவும் பழக்கமானது.
சஞ்சீவி என்ற சொல், சம்+ஜீவி எனப்பகுப்புப் பெறும். சம்-செம்மையான, செம்மைசெய்யப் பட்ட, திருத்தமான என்ற அர்த்தங்களை உடையது. ஜீவி என்பதற்கு உயிர்வாழ்வது, உயிர்க ளை வாழவைப்பது என்ற அர்த்தங்கள் உள்ளன. எனவே இம்மலை தானும் செம்மையாக அமைந்து, பிறரையும் செம்மையாக வாழவைப்பது என்ற குறிப்பின்பேரில் பாரதிதாசன் இப் பெயரை அளித்திருக்கலாம்.
சஞ்சீவி, பர்வதம் ஆகிய இருசொற்களும் சமஸ்கிருதமொழியைச் சேர்ந்த கட்டிலா உருபன்கள்.அத்து, இன் இரண்டும் தமிழின் கட்டுருபன்கள் (இலக்கண அமைப்புக்கு உதவுபவை). இந்த அமைப்பை நோக்கும்போது, தமிழ் உட்பட ஏனை இந்தியமொழிகளுக்கும், சமஸ்கிருதம் சொற்களை (கட்டற்ற உருபன்களை) மட்டுமே வழங்கியுள்ளது, சமஸ்கிருதத்திற்கும் முந்திய தமிழ்தான் இலக்கண அமைப்பினை இந்திய மொழிகளுக்கு வழங்கியுள்ளது என்ற உண்மை குறிப் பினாற் புலப்படுகிறது. ஆரியமொழியான சமஸ்கிருதம் வருமுன்பே தமிழ் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தது என்பதற்கு பிராஹ்மி போன்ற (இன்றைய பாகிஸ் தானிலுள்ள) வடநாட்டு மொழிகளும் சான்று. சிந்தி முதலிய மொழிகளிலும் தமிழ்போன்ற ஒட்டுநிலை அமைப்பே காணப்படுகின்றது என மொழியியலாளர் குறித்துள்ளனர்.
பாரதிதாசனின் கவிதைகளில் சிறந்தது என்று கருதப்படும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நெடுங்கவிதை. பாரதிதாசனை அறியாத இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது.பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துகள் பல. இவற்றில முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
கதை சுருக்கம்:
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஓர் அழகிய சூழலில் நிகழ்கிறது. அந்த இயற்கைச்சூழல் ஒரு மலைச்சாரல். சஞ்சீவி பர்வதம் என்பது அம்மலையின் பெயர். குப்பன் என்ற இளைஞன் ஒருவன் தன் காதலி வஞ்சி என்பவள் வரவுக்காகக் காத்திருக்கிறான். அவளும் வருகிறாள். மனமகிழ்ந்து அவளை முத்தமிடச் செல்கையில் மறுக்கிறாள் அவள். காரணம் கேட்கிறான் குப்பன். முன்நாள் சொன்னபடி குப்பன் அந்த மலையிலிருக் கும் இரண்டு மூலிகைகளைப் பறித்துத் தரவேண்டும் என்கிறாள் வஞ்சி. இல்லையென்றால் என் உயிர் இருக்காதுஎன்று மிரட்டுகிறாள். நீ கல்லில் நடந்தால் கால்கடுக்கும், மற்றும் கொடிய விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்கிறான் குப்பன். வாழ்வில் எங்கும் உள்ளது தான், வாருங்கள்என்கிறாள் வஞ்சி.
இம்மூலிகைகள் அசாதாரணமானவை. ஒன்றைத் தின்றால், உலகின் மாந்தர்கள் அனைவரும் பேசும் பேச்சையெல்லாம் கேட்கலாம். மற்றொன்றைத் தின்றால், இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கலாம். ஆதலால் மூலிகையின் ஆசையை விடு என்கிறான் குப்பன். கேட்கும் வஞ்சிக்கோ இன்னும் அதிகமாக ஆசை மூள்கிறது.
கோபமுற்ற குப்பன், என்னடி பெண்ணே, இது தகுமோ பெண்களுக்கு? என்கிறான். வஞ்சி, பெண்ணை அடிமையாக நினைத்தீரோ? என்கிறாள். நான் தனியாகவே பர்வதம் செல்வேன். இல்லையென்றால் உயிரைவிடுவேன் என்று மீண்டும் மிரட்டுகிறாள். அவள் கோபத்திற்கு பயந்த குப்பன் அவளைத் தூக்கிக்கொண்டு மலைமீது செல்கிறான். மூலிகைகளைக் கண்டு பறித்துத் தருகிறான்.
இருவரும் முதலில் கேட்கும் மூலிகையைத் தின்கின்றனர். பிரெஞ்சு நாட்டில் எங்கோ ஒரு உணவுவிடுதியில் நிகழும் ஓர் உரையாடல் அவர்களுக்குக் கேட்கிறது. ஓர் இத்தாலி நாட்டவனுக்கும் பிரெஞ்சுக்காரனுக்கும் இடையில் நிகழ்வது அது. உரையாடல் சூழலிலிருந்து அந்த இத்தாலிக்காரன் தன் எதிரில் ஒரு கருப்பன் உட்கார்ந்திருப்பதைச் சகிக்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு புத்திசொல்லும் ஃபிரெஞ்சுக்காரன், 'எங்கள் பிராஞ்சியர்கள் இப் பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ,போ,போ! பேதம் கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடம் இல்லை' என்கிறான். குப்பனும் வஞ்சியும் பிரெஞ்சுக்காரருக்கு வாழ்த்துரைக்கின்றனர். பிறகு நல்ல அமெரிக்கன், பொல்லா அமெரிக்கன் என்று அமெரிக்கர்களை இருவகையாகப் பாகுபடுத்தி ஒரு அமெரிக்கன் பேசுவதைக் கேட்கிறார்கள். அவனையும் வாழ்த்தி, பிறகு இங்கிலாந்து தேசத்திலிருந்து எவனோ பேசுவதைக் கேட்கின்றனர்.
இந்தியாவில் முப்பதுகோடிப் பேர் வாழ்கிறார்கள் என்றால், அவர்களிடையே உள்ள பேதங்களும் அவ்வளவு இருக்கும்; அவற்றை வளர்க்க, புராணங்கள், இதிகாசங்கள் வேறு இருக்கின்றன; சாதிப்பாகுபாடுகள் வேறு. எனவே அங்குள்ள மாந்தர் கல்லாய்க் கிடக்கிறார்கள். கொள்கைப் பிடிப்பு கொள்வோரையும் வேரறுக்க சாக்குருவி வேதாந்தம் வேறு இருக்கவே இருக்கி றது; எனவே நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது என்கிறான் ஆங்கிலேயன்.
இருவரும் தம் சொந்த நாட்டு நிலைக்குத் துயருறுகின்றனர்.
பாரதிதாசனின் கவிதைகளில் சிறந்தது என்று கருதப்படும் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற நெடுங்கவிதையை பல்வேறு அர்த்த அலகுகளாக பிரித்து, 'தமிழ் கூறும் நல்லுலகு' இதுகாறும் இந்தக் கவிதை தமிழுக்கு வழங்கியதாகக் கூறிவந்த மதிப்பீடுகளை தகர்க்க முயல்கிறார் பேராசிரியர் க.பூரணசந்திரன். ஒரு கவிதைக்கு இது போன்ற மிக நீண்ட விமர்சன வாசிப்பை பல்வேறு அர்த்த நோக்குகளுடனும், குறிப்பீடுகளுடனும் அளிப்பது மிகவும் அரிதான ஒரு முயற்சி. இந்தக் கட்டுரை மிக நீளமானது என்பதால் இதனை பகுத்து தொடர்ந்து வெளியிடவுள்ளோம். தற்போது இந்த முதல் பகுதியை வெளியிடுகிறோம்.]
இருவரும் முதலில் கேட்கும் மூலிகையைத் தின்கின்றனர். பிரெஞ்சு நாட்டில் எங்கோ ஒரு உணவுவிடுதியில் நிகழும் ஓர் உரையாடல் அவர்களுக்குக் கேட்கிறது. ஓர் இத்தாலி நாட்டவனுக்கும் பிரெஞ்சுக்காரனுக்கும் இடையில் நிகழ்வது அது. உரையாடல் சூழலிலிருந்து அந்த இத்தாலிக்காரன் தன் எதிரில் ஒரு கருப்பன் உட்கார்ந்திருப்பதைச் சகிக்கவில்லை என்று தெரிகிறது. அவனுக்கு புத்திசொல்லும் ஃபிரெஞ்சுக்காரன், 'எங்கள் பிராஞ்சியர்கள் இப் பேதம் பாராட்டித் தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்; பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ,போ,போ! பேதம் கொண்டோர்க்குப் பிராஞ்சில் இடம் இல்லை' என்கிறான். குப்பனும் வஞ்சியும் பிரெஞ்சுக்காரருக்கு வாழ்த்துரைக்கின்றனர். பிறகு நல்ல அமெரிக்கன், பொல்லா அமெரிக்கன் என்று அமெரிக்கர்களை இருவகையாகப் பாகுபடுத்தி ஒரு அமெரிக்கன் பேசுவதைக் கேட்கிறார்கள். அவனையும் வாழ்த்தி, பிறகு இங்கிலாந்து தேசத்திலிருந்து எவனோ பேசுவதைக் கேட்கின்றனர்.
இந்தியாவில் முப்பதுகோடிப் பேர் வாழ்கிறார்கள் என்றால், அவர்களிடையே உள்ள பேதங்களும் அவ்வளவு இருக்கும்; அவற்றை வளர்க்க, புராணங்கள், இதிகாசங்கள் வேறு இருக்கின்றன; சாதிப்பாகுபாடுகள் வேறு. எனவே அங்குள்ள மாந்தர் கல்லாய்க் கிடக்கிறார்கள். கொள்கைப் பிடிப்பு கொள்வோரையும் வேரறுக்க சாக்குருவி வேதாந்தம் வேறு இருக்கவே இருக்கி றது; எனவே நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது என்கிறான் ஆங்கிலேயன்.
இருவரும் தம் சொந்த நாட்டு நிலைக்குத் துயருறுகின்றனர்.
அப்போது, உன்னால் முடியும் நீ போய் அந்த சஞ்சீவி பர்வதத்தை தூக்கி வா என்ற குரல் கேட்டது. அது என்னவெனில், இராமாயணப்போரில் இராமனும், லச்சுமனனும் அம்பினால் தாக்கப்பட்டனர். இதை கண்டு குப்பன் பயந்தான், பின் அவன் வஞ்சியிடம் வா போய்விடலாம் என்றான். அதற்கு அவள் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றால். "அனுமன் உனக்கு இராமன் அருள் உண்டு உன்னால் நிச்சயம் முடியும் நீ போய் ஒரே கையில் சஞ்சீவி பர்வதத்தை கொண்டு வா என்று ஜாம்பவான் கூற, அப்படியே ஆக்ட்டும் என்று அனுமான் கூறினான்" இவ்வாறுமீண்டும் அக்குரல் கேட்டது.
அதை கேட்ட குப்பன் பயந்து நான் முன்பே சொன்னேன் நீ கேட்டாயா இப்பொழுது அனுமனுக்கு இராமன் அருள் உள்ளதாம் நாமிருவரும் மாண்டோம் என்று குப்பன் புலம்பினான்.
இதை கண்டு நகைத்த வஞ்சி, தான் கையில் உள்ள மற்றொரு கனியான இவ்வுலகில் நடக்கும் நிகழ்ச் சிகளையெல்லாம் பார்க்க கூடிய கனியை கொடுத்தாள், அதை உண்ட பின் அங்கே ஒரு பாகவாதர் அமர்ந்திருக்க அவரை சுற்றி சிலரும் இருந்தனர். பாகவதர் இராமயணக் கதையை தொடர்ந்து கூறியப்படி அமர்ந்தார் அதில், ஜாம்பவானின் குறிப்பின்பேரில் அனுமன் பறந்துசென்று, கைலாயம், மேரு, நீலம் முதலிய பல்வேறு மலைகளையும் தாண்டி, இம்மருந்துமலைக்கு முன்னதாக உத்தரகுரு நாட்டையும் கடந்து இதனை அடைகிறான். இதில் நான்கு மூலிகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவற்றால் இராமனைச் சேர்ந்த அனைவரும் உயிர்பெற்றெழுவது மட்டுமன்றி, உடல்வலிமையும் பெறுகின்றனர். பின்னர் அனுமன் அம்மலையை இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்தார் என ஒரு பாகவதன் சொல்லிமுடித்தான்.
இதை கண்டு குப்பன் தான் ஒரு கதையை கேட்டுதான் பயந்தோமா என வெட்கப்பட்டான். அப்போது வஞ்சி இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்று வரை மலையை தூக்கும் மனிதர் பிறக்க போவதில்லை, அப்படி இருந்திருந்தால் நாம் இப்படி சாதி மத சண்டையிட்டும், பசி பட்டினியாலும் வாடமாட்டோம், எனவே இது போன்ற மூடநம்பிக்கைகளையும், வீண் அச்சத்தையும் தவிருங்கள் அன்பரே. என்றாள்.