காலாவதியாகி போன காதல்

காதலின் ஆழம் பற்றியும், அர்த்தம் பற்றியும்
பேசி காலம்கெடுக்க விரும்பவில்லை
இந்த கதையில் ஒரு காத்திரமான கணப்பொழுது காதலை சொல்ல போகின்றேன் எனது எழுத்து நடையில்,
அன்று ஏதோ ஒரு மனச்சுமையுடன் நகர்ந்தேன்.. காதெல்லாம் கன இசை,
எனக்கு அப்படி இசையை ரசிப்பதில் ஒரு அலாதிப்பிரியம்,
ஏதேதோ எங்கெங்கோ ஓடித்திரியும் மனதை இசையில் லயிக்க வைக்க முயற்சிப்பேன்,
பேருந்தின் ஓரத்தில் ஒரு ஆசனம் ஜன்னலோரமாய்,
"ஒரு முறை ஒரு முறை" ஜி வீ பிரகாஷ் இசையும் குரலும் ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்க செய்தது.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது... சட்டென எழுந்து வாசல் அருகில் வருகின்றேன், ஒரு பெண்,
ஏதோ வருடக்கணக்காய் பழகியவள் போல தோன்றியது,
என்ன செய்கின்றேன் என்பது தெரியாமல் அவளையே ஒரு கணம் பார்த்துக்கொண்டு நின்றேன்,
அவள் திரும்பி பார்த்த போது தான் தவறு புரிந்து தலை திருப்பினேன்,
இருவரும் ஒரே இடத்தில் இறங்குகின்றோம்,
ஒரு 5 அடி தூரத்தில் அவள் நிற்கின்றாள், அவள் அதிகம் நிறம் என்று சொல்லமுடியாது, அழகான கூந்தல்அவளுக்கு,
இப்போது நான் அவளை பார்க்காமல்
எதிர்ப்புறமாய் இருக்கும் கண்ணாடியை பார்கின்றேன்
அவள் என்னை பார்ப்பது புரிந்தது,
சட்டென திரும்ப அவள் மறுபக்கம் திரும்பினாள், முகத்தில் புன்னகை ஓன்று,
அவள் புன்னகைக்கும் போது இன்னும் கொஞ்சம் அழகாக,
அவள் நாகரிக உடையில் இருந்தபோதும் நாகரிகமாய் இருந்தாள், நான் ஒன்றும் குழப்பவில்லை, நாகரிகம் என்ற பேரில்
கலாச்சாரம் மறந்து திரியும் எங்கள் தமிழ் பெண்களின் மத்தியில் அவள் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தாள்,
பக்கத்தில் சென்று பேச வேண்டும் போல் இருந்தது ஆனால் எனக்கு அதற்கு துணிச்சல் இல்லை..
"அழகு செய்யும் சாதனம் வாங்க தோன்றும் காரணம்...உன்னை சேர்ந்த பின்புதான் அழியும் அவற்றின் நாடகம்..."
அவளை பற்றிய நினைவுகளில் பத்து நிமிடங்கள் பறந்ததே தெரியவில்லை..!
அவள் ஏறவேண்டிய பேருந்து வருகின்றது போல தயாரானாள்,
அவள் போகும்போது மனசுக்குள் ஏதோ ஒரு உந்துதல் பேச சொல்லி கெஞ்சியது
இருந்தும் நான் வெறுமனே இசையுடன் நின்றேன்,
அவள் போகும்போது கடைசியாக ஒரு புன்னகை அப்படியே இதயத்தின் ஆழத்தில் அச்சடித்து நின்றது..
இனி அவளை காண்பது என்பது கனவாகத்தான் முடியும்..
லட்சம் பேர் சுத்தி திரியும் அவசரமான நகரில் இப்படி ஓர் இருவரை எப்போதாவது ஒருமுறை தான் காணக்கிடைக்கும்
இப்படி எல்லோருக்கும் கனபொழுதில் வரும் ஒரு வித உணர்வு என்று கூட காதலுக்கு வரைவிலக்கணம் கொடுக்கலாம், என்னவோ என் காதலும் அன்று ஒரு கணபொழுதில் காலாவதியாகி போனது....!!!!
யாவும் கற்பனை.