வரலாற்றை புரட்டி பாரு - நாகூர் கவி
நாங்களா இங்கே தீவிரவாதி....?
இதை சொன்னவன்தானே தந்திரவாதி...
அம்புக்கு ஓடும்
கூட்டமா நாங்கள்....?
வம்புக்கு போகும்
கூட்டமா நாங்கள்....?
வாளினை எடுக்கும்
கூட்டமா நாங்கள்....?
சொல்லுங்கள்...!
தோளினைக் கொடுக்கும்
தோழமையே நாங்கள்.....!
கழுதைக்குத் தெரியுமா.....?
கவிதையின் ரசனை....?
கழுதைக்குத் தெரிந்ததெல்லாம்
காகிதத்தின் வாசனையே....!
வரலாற்றைத் திரும்பிப் பாரு
அதை திருத்தியது யாரு....? சற்றுகூறு....?
வெள்ளையனின் படைக்கலம் கண்டு
கொல்லையிலே அடைக்கலம் புகுந்த
தொடை நடுங்கிக் கூட்டமா நாங்கள்....?
வெள்ளையனின் படைக்கலமே
நடுநடுங்க வைத்து
போர்க்களம் புகுந்த
வீரர் திப்புவின் விதையல்லவோ நாங்கள்....!
நாட்டில் எங்கோ எவனோ
வைத்த வெடிகுண்டிற்கு
முஸ்லீம்கள் பெயரை இணைப்பது
உங்கள் வழக்கமடா....
இது காந்தி கொலை வழிவந்த
உமது வம்சத்தின் பழக்கமடா....!
கழுதைக்கு தெரியுமா....?
புதுகவிதையின் வாசனை....?
கழுதைக்கு தெரிந்ததெல்லாம்
வெறும் காகித யோசனை....!
நல்லிணம் பேணி
நடக்கச் சொன்ன
புது மல்லிகையடா
எங்கள் முன்னோர்கள்....!
மனித நேயமோ
மண்ணில் மலர
நன்றாய் பூத்தார்கள்
முஸ்லீம் பெரியோர்கள்....!
அமைதியில் முஸ்லீமுக்கு பங்குண்டு
அட அதற்கு பெயரா வெடிகுண்டு.....
நியாயமா....?
கூறுங்கள்...இதுதான்
மனித நேயமா....?