நட்பு

வெகுதூரம் வெயிலில் செல்லும் போது நம் விழிகள் ஒரு நிழல் தேடும். அப்படி என் விழிகள் தேடிய நிழல் தான் உன் நட்பு.. சுடும் மணலில் நடக்கும் போது நம் கால்கள் ஒரு நிழல் தேடும். அப்படி என் விழிகள் தேடிய நிழல் தான் உன் நட்பு. வெயிலோடு வரும் வானவில் ஓய்வெடுக்க ஒரு நிழல் தேடும் அப்படி என் விழிகள் தேடிய நிழல் தான் உன் நட்பு. மழையோடு வரும் தென்றல் மறைய ஒரு நிழல் தேடும் அப்படி என் விழிகள் தேடிய நிழல் தான் உன் நட்பு. விண்வெளியில் பறக்கும் பறவை கூட்டங்கள் அமர ஒரு நிழல் தேடும் அப்படி என் விழிகள் தேடிய நிழல் தான் உன் நட்பு...

எழுதியவர் : சிந்து கஸ்தூரி (30-Mar-14, 12:40 pm)
Tanglish : natpu
பார்வை : 257

மேலே