நட்பு

நந்தவனத்தில் நுழைவதற்கு காற்று அனுமதி கேட்டா வரும்..? நட்பும் அவ்வாறு தான் உத்தரவின்றி உள்ளே நுழையும் நீங்கா உறவாக.. பூமியை தொடுவதற்கு மழை அனுமதி கேட்டா வரும்.? நட்பும் அவ்வாறு தான் உத்தரவின்றி இதயத்தை தொடும் நீங்கா நினைவாக.. கரையை தொடுவதற்கு அலை அனுமதி கேட்டா வரும்.? நட்பும் அவ்வாறு தான் உத்தரவின்றி மனதை தொடும் நீங்கா நினைவாக..

எழுதியவர் : Sindhu kasthuri (30-Mar-14, 11:58 am)
Tanglish : natpu
பார்வை : 245

மேலே