அறியாமை போக்குவோம்
அறிவின் அறியாமை!!
காரணம் புரியாமல்
சிறிதை பெரிதாக்கி
காட்டும் திரைப்படங்கள்!!
மனதைப் புண்ணாக்கி!!
மானம் சிறிதாக்கி
உடையை குறைவாக்கி
வீழும் திரைப்படங்கள்!!
விழாக்கள் பல எடுத்து!!
விளம்பரம் பல செய்து!
பிஞ்சு உள்ளங்களை
ஈர்க்கும் திரைப்படங்கள்!!
கலாசாரம் விட்டகன்று!
கலையம்சம் என்றேற்று!
பாரம்பரியமதை
ஒதுக்கிவிடும் திரைப்படங்கள்!!
குடும்பம் சேர்ந்திருந்து!
கனியும் பாடல்களை!
கருத்தாய் அதை ரசிக்க
விரசம் விடுவதில்லை!!
புதுமைப்படைப் பென்று!!
புரியா படம் செய்து!
பணமே பெரிதென்று!
படைக்கும் இப்படங்கள்!!
சிந்திக்கும் உள்ளங்களை!!
சினிமாவின் கழிவுகளாய்!!
ஆக்கிவிட்ட பெறுமையினை!!
தனதாக்கும் திரைப்படங்கள்!!
அறியாமை தனைப் போக்கி!!
அறிவுடமை பல செய்து!!
திரைப்பட சிறைப் பட்டவரை!!
மீட்டிட உடன் வாரீர்!!
திரைப்பட போதையுற்று!!
திருந்திடா உள்ளங்களை!
திருத்திட வேண்டுமெனில்!!
துணை செய்ய உடன் வாரீர்!!
பொழுது போக்கும் இப்படங்கள்!
பலதுமுள்ள கலப்படங்கள்!
பலமுள்ளதாகாமல்
படையெடுத்து வாரீர்!!
இனக் குரோதமதை முன்வைத்து!
இனம் சேறா பிரித்து வைக்கும்!
ஈனப் படைப்பதனை!
ஒதுக்கிடுவோம் முன் வாரீர்!!
ஜவ்ஹர்