விட்டுக்கொடு சிகரம் தொடு

இலைக்கு விட்டுக் கொடுத்த
விதை
விருட்சம்
------------------------------------------
மழைக்கு விட்டுக்கொடுத்த
பூமி
செழிப்பு
------------------------------------------
களைக்கு விட்டுக்கொடுத்த
உடல்
உழைப்பு
-----------------------------------------
உளிக்கு விட்டுக்கொடுத்த
கல்
சிற்பம்
-----------------------------------------
கலைக்கு விட்டுக்கொடுத்த
கண்கள்
ரசனை
-----------------------------------------
நெல்லுக்கு விட்டுக்கொடுத்த
வயல்
பசுமை
-----------------------------------------
சொல்லுக்கு விட்டுக்கொடுத்த
தமிழ்
இனிமை
------------------------------------------
அனுபவத்திற்கு விட்டுக்கொடுத்த
அறிவு
ஞானம்
--------------------------------------------
ஆடைக்கு விட்டுக்கொடுத்த
உடல்
மானம்
----------------------------------------------
கருத்துக்கு விட்டுக்கொடுத்த
நா
ஜனநாயகம்
-------------------------------------------
எழுதுகோலுக்கு விட்டுக்கொடுத்த
எழுத்து
கவிதை
--------------------------------------------
அம்புக்கு விட்டுக்கொடுத்த
நாண்
பாணம்
-------------------------------------------
அன்புக்கு விட்டுக்கொடுத்த
இதயம்
காதல்
-------------------------------------------
ஓடைக்கு விட்டுக்கொடுத்த
மலை
அருவி
-------------------------------------------
மீனுக்கு விட்டுக்கொடுத்த
கடல்
வளம்
--------------------------------------------
வாய்மைக்கு விட்டுக்கொடுத்த
வார்த்தை
பலம்
--------------------------------------------
வர்ணத்திற்கு விட்டுக்கொடுத்த
வானவில்
வண்ணம்
--------------------------------------------
ஒளிக்கு விட்டுக்கொடுத்த
மின்மினிப் பூச்சி
மின்னும்
---------------------------------------------
பொறுமைக்கு விட்டுக்கொடுத்த
கோபம்
சாந்தம்
---------------------------------------------
ஈர்ப்புக்கு விட்டுக்கொடுத்த
இரும்பு
காந்தம்
---------------------------------------------
இனத்துக்கு விட்டுக்கொடுத்த
பொறுமை
புரட்சி
-------------------------------------------
நாட்டுக்கு விட்டுக்கொடுத்த
உயிர்
பெருமை
-------------------------------------------

எழுதியவர் : கீதமன் (31-Mar-14, 8:58 pm)
சேர்த்தது : கீதமன்
பார்வை : 235

மேலே