வஞ்சிக்கொடியே வண்ணகிளியே
![](https://eluthu.com/images/loading.gif)
கொண்டைமேல பந்து
கொண்டைபோட்டு
செம்பருத்தி பூவொன்னு
அதில் சொருகிவச்சு
தேனூறும் உதட்டில்
இலஞ்சாயம் பூசிவந்தே
மூங்கிலில் முதுகனைத்து
சோர்ந்தேதான் நின்றாய்
அந்தி சாயும் நேரமது
அழகான பொன்மாலையது
தென்னங்கல் சுவையாய்
திகட்டாது தித்திக்றாய்
தேவைதையுன் தேகம்
வாடியே உந்தன் மச்சான்
எனக்கான காத்திருந்தாயோ
பார்வையில் போதைதந்து
உள்ளத்தில் பரவசமாய்
பற்றிக்கொண்ட பதுமையே
வருவேன் உனைத்தேடி
வாடாமலேதான் பூத்திருடி
பாசி மாலை தொங்குகின்ற
வலம்புரி மணிக்கழுத்தில்
நெஞ்சதொட்டு சேதிசொல்லும்
பொன் தாலிதான் தந்து
வலப்பக்கம் இருக்கவச்சு
வாழ்வெல்லாம் சேந்திருப்பேன்,,,,
காதலோடு என்றும் உன்னோடு ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...