முடியாத் தேடல்
இரவுகளில் பொக்கிச கனாகண்டு
விடியலில் சோற்றுப் பானையில்
பருக்கைகள் தேடி ....
இப்படி தேடலில் ஆரம்பித்து
இன்னும் முடியாத தேடல்கள்
அரும்பு மீசை முளைத்த போது முகக்கண்ணாடியில் எதையோய்த் தேடி
மல்யுத்தம் நடத்தி
அழகிகளைத் தேடிய ஒரு தேடல் ....
பட்டங்கள் கைக்கு வந்த பிறகு
அலுவலகப் படிகளேறித் தேடியும்
கிடைக்காத தேடல் ..
அவனுக்கு மட்டும் அத்துப்படி
அவனேறி இறங்கிய
அலுவலகப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை
கவிதைகளை களமிறக்கி
பார்வைக்கு விட்டபோதும்
பாலியல் வந்து பாதி மார்க்குதான் மிச்சம் .மிச்சத்தை தேடி
மீண்டும் தொடர்கிறான் தேடல்
விரக்தியின் விளிம்புக்கு வந்து
வயலில் விதைத்த போது
நீரைத் தேடிய தேடல் நீர்த்துப் போனது
வானுறையும் மழையும்
இவனிடம்
கண்ணாமூச்சி காட்டியது
தேடலில் தேய்ந்தது காலுறையும்
நெஞ்சுறையும் நம்பிக்கையும்
ஆனாலும் அவன் தேடல்
இன்னும் முடியவில்லை
முடிவதற்கான அறிகுறியும்
அருகில் தெரியவில்லை .