இன்னுமோர் கருவறை

காலக் காற்றடிக்க .......
கருவறைக் கரையில் .........
கடத்தப்பட்டேன் .......
தாயின் மடிக்கரைக்கு .....
மாசில்லா அக்கரையில் ........
அக்கறையின் அரவணைப்பில் ........
அழுது அமுது சுவைத்த ........
அணையாத நினைவுகள் .......
அழியாச் சுவடுகள் ..........

அதன் பின் ....
அறிந்தும் அறியாமலும் ........
தெரிந்தும் தெரியாமலும் ....
அகவைக் காற்றுகளிலும் .......
அறியாமைப் புயல்களிலும் ...
சிக்கி ஒதுங்கிய
ஒதுக்கப்பட்ட கரைகள்
பற்பல ....

சில கரைகளில்
பதுங்கி இருக்கும் பச்சோந்திப் பாசங்கள் .....
சிலதில்
சில்லறைக்காக கல்லறை வழி காட்டும் ...
சீர்க் கெட்ட அறிவுரைகள்
சில சிரித்துச் சிரித்தே கழுத்தறுக்கும் .....
கயவர்களின் கழுகுக் கரைகள் ....
சில உருகி உருகி காதலித்து ....
பின் என் உயிரை உருக்கி உறிஞ்சி
ஒழுகி ஓடும்
மெழுகுக் கரைகள் ......
சில நீருக்கடியில் தனலாய் தகிக்கும் ....
துரோகத்தின் தீக் கரைகள் ......
சில நிஜங்களை விழுங்கி .....
நிழல்களை நியாயப் படுத்தும் ...
நீரே இல்லா
கபடக் கானல்க் கரைகள் .......

பல கரைகள் ....
கைமாறி ...
உருக்குலைந்து .......
அவை அலைகளில்
அலைக்கழிந்து ....
அனாதையாய்
நான்
அலையும் பொழுது .......
எனை அரவணைத்து ....
அகப்படுத்தி ....
தன்னகம் கொடுத்து ....
என் அகம் காத்தது
ஒர் கரை ...
அது நட்பின்
புனிதக் கரை



கற்புக்குக் கட்டியம் கூறும்
நட்புக் கரையில்
கண்டேன் நானும் ....
என் அன்னையின்
கருவறைக் கரையில்
கண்ட தாய்மையின்
அதே .....
கத கதப்பு ....

அக்கரை........
அன்பின் சிறையறை
நேசம் உற்பத்தியாகும்
பாசப் பட்டறை
எதையும் விட்டுக் கொடுக்கும் ....
தியாகக் கரை ....
எதற்காகவும் எனை விட்டுகொடுக்காத ...
தன் மானக் கரை ...
என் கண்ணீர்த் துடைக்கும்
கனிவுக் கரை ....
பண்பைத் தெளிக்கும்
பன்னீர்க் கரை .......
அடித்தாலும் அரவணைக்கும் ........
அதிசயக் கரை .....
எனை அன்பினால்
ஆட்டிப் படைக்கும்
அன்புக் கரை ....
அறிவுத் தாகம்
பகிர்ந்து தீர்க்கும்
தீர்த்தக்கரை ........
நல் வழிக்கு எனை வழிமொழியும்
கலங்கரை
அறியாமை அழித்த
அறிவுரைக் கரை
முயலாமை நீக்கிய
முயற்சிக் கரை
எனை தெய்வமாக வழிபடும்...
பக்திக்கரை ...
நான் பக்தனாக வழிபடும்
கோயில்க் கரை ...
வாழ் நாள் முழுதும்
எனைத் தொடரும்
நிழல்க் கரை ......
என் தவறுகளையும்
மறந்து மன்னிக்கும்
பாவ மன்னிப்பின் கரை ....

கல்லறை வரை
எனைச் சுமக்கும் ...
நட்பின் கரை
எனக்கு இன்னுமோர்க்
கருவறை ........

எழுதியவர் : கீதமன் (31-Mar-14, 5:17 pm)
பார்வை : 76

மேலே