காத்திருக்கும் திறமை வேண்டும்

படபடக்கும் வலதுகண் இமைகள்
அதையும் மீறி வேகவேகமாய்
துடிக்கும் பதைபதைக்கும் நெஞ்சம்
காத்திருந்த நற்செய்தி கைகூடி
வாசல் கதவை தட்டும் இனியசத்தம்
காதில் கேட்பது போல தோன்றி
ஏமாற்றம் ஏக்கம் ஏமாற்றம்

எண்ணிய பொருள் கையெட்டும் தூரம்
என எண்ணி விரல் நீட்டி எட்டாமல்
காரணம் தேடி கவலைபடும் அல்லது
காத்திருந்து மறுமுறை முயன்று தோற்று
பின் என் எரிச்சலடங்க நரியுடன் நட்பு
கொண்டு சீச்சீ இந்த பழம் புளிக்கும் எனறு
ஏமாற்றத்தை ஏமாற்ற எண்ணி ஏமாந்தேன்

பலதிறமைகள் இருந்தும் காலம் கனிந்து
பலன்தர காத்திருக்கும் திறமை பொறுமை
இல்லாமல் படும்பாட்டை பாட்டாய் பாடி
வரம்தர வேண்டி நின்ற பொழுது இயற்கை
விரல்நீட்டி காட்டி கொடுத்த பாடம் கேளுங்கள்

கரடுபூமி உழுது விதைநெல் விதைத்து
கார்முகில் மழைவேண்டி வானம்பார்த்து
களையெடுத்து உரமிட்டு உடலுழைப்பு
எல்லாம் போட்டு கடன்உடன் வாங்கி
கக்ஷ்ட நக்ஷ்டமெல்லாம் தாங்கிகொண்டு
காலம் கனிய காத்திருக்கிம் முதிர்ச்சி
யாரிடம் கற்றானோ உழவன் பலன்பாருங்கள்

அறுவடைக்கு தயாராகி பச்சைபசேலென
பொன்வெயில் தகதகவென மூலாம்பூச
தென்றல்காற்று தளதளவென தாலாட்டிவிட
பார்த்தபடி நின்றிறுந்த உழவன் முகத்தில்
காத்திருந்து வென்ற கர்வம் எதிர்பார்த்தேன்
ஆச்சர்யம் அதிசயம் ஆச்சர்யம் அதிசயம்
அடுத்த காத்திருப்புக்கு தயாராகும் தெளிவும்
தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் அற்புதமாய்
உழவன் முகத்தில் கண்டு கற்றுணர்ந்தேன்
காலமும் நேரமும் கூடிவர நேரமாகலாம்
ஆக்கப்பொறு ஆறப்பொறு ஏகனாகலாம்

எழுதியவர் : கார்முகில் (2-Apr-14, 10:03 am)
சேர்த்தது : karmugil
பார்வை : 291

மேலே