நித்திரை தொலையும் சித்திரை
வற்றிய வயிறு
ஒட்டிய மேனி
பற்றிடும் கண்ணில்
சித்திரை வானம் ...!
இருண்ட உலகின்
இதயமாய்
இதமாய் வந்துதிக்கும்
சித்திரை நிலவு ...!
வறுமை கோடு
வறட்சி கண்டு
வந்து சிரிக்கும்
சித்திரை ஆதவன் ...!
நித்திரை தொலைந்து
வியர்வையில் நனைந்து
உழைக்கும் தோழனுக்கு
சித்திரை தொல்லைதான்...!!