அவள் அப்படித்தான்

"கன்ஃபாம் தான். அடுத்த மார்ச் உங்க கைல ஒரு குழந்த இருக்கும். அவரு வரலையா" டாக்டர் நல்ல செய்தியுடன், கேள்வியும் தொடுத்தார்"

"பையனா பொண்ணா னு எப்ப சார் தெரியும்" சந்தோசம் கலந்த பயத்துடன் கேட்டாள்... கேள்வியை வேண்டுமென்றே தவிர்த்தாள் ராணி

"அதெல்லா இப்ப தெரியாது,தெரிஞ்சாலும் யாரும் சொல்ல மாட்டாங்க" அடுத்தவருக்கான மணியை அடித்துவிட்டு "காச வெளியில கட்டிடுங்க.... நா கேட்டதுக்கு பதிலே வரல "

"அவரு செத்து 2வருசம் ஆச்சுங்க அவரு வரமாட்டாரு" (சிரித்துகொண்டே) வேண்டுமென்றே இப்படி சொல்லிவிட்டு அடுத்து இங்க வரகூடாது என்ற நோக்குடன் கிளம்பினாள் ராணி..

"என்னடி சொன்னாக? பையனா ? பொண்ணா ? கழுவிடலமா? என்ன பண்ணலாம்?சொல்லுங்கரல... ... நின்னு பதில் சொல்லுடி " தோழி வசுந்தரா

"இத்தன கேள்விக்கு பதில் சொல்லமுடியாது..ஒரு பதில் தான், குழந்தைய வளக்கபோறேன் அவ்ளோதான்..." ராணி (அவளுள் ஒரு புது தைரியம் )

"ராணி நல்லா யோசிச்சுதானா பேசற, அடிக்கற வெய்யில இப்டிலாம் பேசாத .... தோணறத எல்லாம் செய்ய முடியாது, நம்ம இருக்கற நிலைமையால " வசுந்தரா அக்கறையுடன் கோபமாக கேட்டாள். (அவர்கள் வரும் வழியில் ஒரு மரமும் இல்லை நிழல் தருவதற்கு )

ராணி , வசுந்துரா பேசுவதை வாகன ஒலியுடன் கரைத்துவிட்டாள்-அவளுக்கு இப்போ மணியிடம் அனுமதி வாங்க வேண்டும் அதை எப்டி வாங்க என்று சிந்தித்து கொண்டே இருந்து, மணி இருக்கும் இடத்திற்கே வந்தாள்.

"வசுந்தரா நீ இங்கயே இரு ,நா போய் பேசிட்டு வரேன் சரியா! ஒன்னும் சொல்லமட்டாருடி" வசுந்தராவை தேற்றினாள் ராணி

"மேடம் இந்த அட்ரஸ் எங்க இருக்கு சாலையின் ஓரத்தில் நின்ற வசுந்தராவிடம் ஒரு சார்" அட்ரஸ் விளக்கிமுடிப்பதர்க்குல் ராணி வந்தாள்...

என்ன?.... வேணாம், கழுவிட்டு வரசொன்னனா? வேற என்ன சொல்லிருக்க போறான்.சொட்டமாங்கதலயன்... வசுந்தரா திட்டி முடிப்பதற்குள்...

ராணி ஆரம்பித்தாள் "திட்டாதடி ... மணி பாவம், யாரா இருந்தாலும் அப்டித்தான் நடந்துக்குவாங்க ஆன என்னான்னு தெரில சரின்னு சொல்லிட்டாரு"
நடக்க ஆரம்பித்தினர் வீட்டிற்கு"என்னடி சொல்ற....பாரேன் அந்த சொட்டைகுள்ளையும் எதோ ஒன்னு இருக்கு.ஆமா பண்ணதெல்லாம் கழிக்கனும்ல.. " --வசுந்தரா

"ஆன 6 மாசம் வரைக்கும் வேலைக்கு வர சொல்றாரு.. அதான் என்ன பண்றதுன்னு தெரில.. ஆன உனக்கு யாரும் இல்லைன்னு நீ கவல படதேவை இல்ல வசுந்துரா..உன்னையும் என்னையும் பாக்க ஒருத்தி வரபோறா....பரவாஇல்ல நம்மகிட்டயும் சந்தோசம் இருக்குல.நா கூட என்னமோ நினைச்சேன் அப்டியே போயிருவேன் னு " அடக்க முடியாத சந்தோஷத்தில் வாய் குழறினால் ராணி...வசுந்தராவும் பேசவேஇல்ல...

என்ன வெயில் என்று அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள் " பத்தாத வெளிச்சம்,மல்லிகை பூ வாசம் எங்கும் குறையாமல் , சாலையின் இரைச்சலைவிட இங்க அதிகம், அனைத்தும் பெண்களின் வாசம்,நடுநடுவே ஆண்கள் கண்களில் தட்டுபடுகிறார்கள் மீசையின் அளவைபொருத்து.20 அறைகள் மிகாமல் இருக்கும்,ஆனால் சிவப்பு விளக்கு மட்டும் இல்லை மற்றது இருக்கும் காசுகேற்ப." இந்த இடத்தில தான் இருக்கபோகிறேன் என்று தெரியாது அந்த பெயர் வைக்காத பிறக்க போகும் பொண்ணுக்கு "(ஒரு நம்பிக்கை அவளுக்கு )

"கூட்டம் ராணியை சுற்றி வளைத்து குசேலம் கேட்டார்கள்" சரி விடு ராணி அவன் என்ன சொல்றது நாங்கலாம் இருக்கோம்ல...விட்ருவோமா "...கூட்டத்தில் ஒரு மகராசி...

ராணி தன் அறையயை நோக்கி முன்னேறினால் கூட்டத்தில் இருந்து.....

நாட்கள் வளர வளர மாதமும் வளரந்தது வயிறும் வளரந்தது...

"குழந்தைக்கு என்ன பேரு வைக்கலாம்?என்ன படிக்க வைக்கலாம்?எவ்ளோ நக நட்டு சேர்த்துவைக்கலாம்? சொல்லு ராணி... நா இவ்ளோ யோசிக்கறேன்...நீ எதுமே சொல்லமாடீன்கர"-வசுந்துரா

நீ எப்பவும் கொத்தாதான் கேள்விய கேப்பியா?
இதுக்கும் ஒரே பதில் தான் "நா எப்ப இங்க இருந்து போவேன் னு யோசிச்சுட்டு இருக்கேன்.மத்ததுஎல்லாம் அப்டியே நடந்துரும் வசு...,எனக்கு என்ன பயம்னா எனக்கு பின்னாடி அவளையும் இந்த வீடு விடாதோனு பயமா இருக்கு...ஒரு வேசி மகள இந்த(உலகம் ஏன்) தெரு எப்டி பாக்கும் னு தெரியும் ...இருந்தாலும் ஒரு நம்பிக்கை அப்டி நடக்காது...இப்டி எல்லோரும் யோசிக்கரதுதான..."என் புள்ள நல்லா இருக்கனும்,அதுவும் உலகத்த பத்தி தெரிஞ்சக்கணும்"நா மட்டும் என்ன புதுசாவ யோசிக்கபோறேன்...எனக்கு இவ்ளோ பண்ணவன், என் குழந்தைய நல்ல பாத்துக்கவான் னு ஒரு சின்ன நம்பிக்க இருக்கு.. அது நடந்த போதும்.....இப்பொழுது வாய் குழராமல் நிதானமாய் பேசினால்...."

"ராணி ஒன்னும் நடக்காது நாம்ம யாருக்கு ஏது செய்யல...நீ நினைக்கறது நடக்கும் "என்று வெளியே வந்தாள் வசுந்துரா, எதோ சத்தம் கேட்டதால்

"ராணி ராணி...வசுந்தரா ராணி எங்க இருக்கா" -மணி

"ராணி உள்ள இருக்கா" என்று சொன்னவுடன் கடந்து சென்றான் மணி

"ராணி ரூம் நம்பர் 15க்கு போ..இன்னைக்கு நீ தான் அங்க... கஸ்டமர் ஏற்கனவே வந்தவருதான் நீதான் வேணும்னு அந்த ஒன்றகால்ல நிக்கறாரு மனுஷன் " (அவருக்கு ஒன்றகாலு தான் )...

ராணியிடம் எந்த எதிர்ப்பும் இல்ல (ஏன்னா அவ இவ்ளோ நாள் வேலைக்கு போகவே இல்லை .மணியும் இல்லை ) இப்ப கண்டிப்பா போய்தான் ஆகனும்.

"சரி நா போறேன்... இன்னைக்கு தானா கடைசி மாசம், நீங்க சொன்ன மாதிரி நா இனி வரமாட்டேன்" என்றாள்

"ம்ம் தெரியும் ராணி நீ வர தேவ இல்ல.இன்னைக்குதான் கடைசி, நீ இப்ப போ " என்று வாக்கை காப்பாற்றினான் மணி

வசுந்துரா அருகில் வந்து "நா வேணா உனக்கு பதிலா போகட்டுமா" என்றாள்

"போதும்டி... நீ போனது, நா பாத்துக்கறேன் என்னதான் நடக்கும்னு பாக்கலாம் " அவளை சமாளித்தாள்... ஆனால் அங்க எப்டி??? என்று தெரியாமல் அழகை கூட்டும் அறைக்கு சென்று பின் 15 க்கு சென்றாள்.

"சற்று முன் கூட்டிய அழகை கலைக்க ஆயத்தமானாள் கண்ணாடி முன்பு நின்று"- ராணி
(எதுக்கு இதெல்லாம் நடக்கணும்... இப்ப என்ன நடக்குது ... சந்தோசத்த கடைசி வரைக்கும் காட்டமாட்டில மறுபடியும் அழுகையில் மனம் குழறியது ) கண்ணாடிக்கு மட்டும் தெரிந்தது ராணியின் முகமும் அகமும்)

" போதும் ராணி இங்க வா... நா அதுக்கு வரல இன்னைக்கு...பேசணும் இங்க வா...இங்க இங்க பக்கத்துல வந்து உட்காரு... நா உன்ன கடிச்சுலாம் சாப்ட மாட்டேன், ஆமா நீ மாசமா இருக்கீல...நா மாசமா இருக்கற வயித்த நா பாத்ததே இல்ல ராணி..நா உன் குழந்தைக்கு அப்பன் னு நினைச்சுக்கோ...."அருகில் வர ஆரம்பித்தான்

ராணி அந்தநிமிடங்கள் அவளாவே இல்ல..உடல் மட்டும் தான் அங்கு இருந்தது...அந்த நிமிடங்கள் எப்பொழுது முடியும் என்று தெரியாமல் இருந்தாள்...

எல்லாம் முடிந்து, ராணி,... எனக்கு மட்டும் கால் நல்லாஇருந்துச்சுனா உன்ன மகாராணி போல பார்த்து இருப்பேன்..பாரு நொண்டி பயலுக்கு எவனும் பொண்ணும் தரமாடீங்கறான்... கலியுக சாமி இது ...கால தானா பாக்கறாங்க , மனச பாக்கறவன் எவனும் இல்ல ("இதற்கு முன்னாடி நடந்ததக்கும் இவனுக்கும் சம்பந்தம் இல்லாதவன் போல ") உலக நடப்பை சுத்தம் செய்து கொண்டு இருந்தான். எல்லாம் சரி அப்பன் பேரு என்னான்னு கேட்டா?... என்னான்னு சொல்லுவ? கண்டிப்பா நா இருக்கமாட்டேன் பாவம் ராணி நீ!!!

சரி ராணி நா வரேன்.... ம்ம் இனி எங்க வரது,நீயும் இருக்க மாட்ட....பொண்ணு பொறந்த சொல்லு... அப்போ வரேன்...

ராணி "தீயில் விழுந்த நீரை போல"சுருக்கென்று தன்னை உணர்ந்தாள்...அவளுக்கு ஆயிரம் பயங்கள் தொற்றிகொண்டது...ஆனால் ஒரு தெளிவு வந்தது...சேலையும் மனதையும் சரிசெய்துகொண்டு அந்த அறையில் இருந்து விடுதலை அடைந்து வந்தாள், தன் அறைக்கு....

வசுந்துராவிடம் "நா போறேன் ,இனி இங்க இருந்தா எனக்கு சந்தோசம்னா என்னான்னு பாக்காம செத்துறுவேண்டி...எங்கயாவுது போறேன் என்னவோ வேல செய்யறேன்...மறுபடியும் இங்க வரமாட்டேன்டி...இது எதுமே மாறாது, இங்க அப்டியேதான்
இருக்கும், யாரும் மாறமாட்டாங்க ,நீ நா அப்றம் இந்த குழந்த யாரும் மாறமாட்டோம்...கிளம்பினாள் ராணி

வசுந்தராவிடம் எந்த கேள்வியும் இல்லை இந்த முறை.ராணிக்கு இந்த வீட்டின் வாசல் வரைக்கும் வழி தெரியும் ஆனால் வாசலுக்கு அப்பால் தெரியுமா என்று தெரியவில்லை... ஆனால் அவளுக்கு கவலை இல்லை.

ஏனென்றால் அவள் அப்படித்தான் ....

எழுதியவர் : ஸ்ரீனிவாசன்.முனியப்பன் (2-Apr-14, 10:50 pm)
பார்வை : 259

மேலே