குள்ள நரி கூட்டம்
மனிதனாய் பிறந்த எல்லோரும் சுலபமாய் சம்பாதிப்பது எதிரி.அது போல் தோல்வியும் சும்மா
இருந்தால் சுலபமாய் கிடைக்கும்.
கலர் கலராய் கனவுகள் எல்லோருக்கும் சொந்தம்.
நிஜமான வாழ்க்கை அவ்வளவு அழகாய் எல்லோருக்கும் அமைவது இல்லை.
ஏமாற்றம் இல்லாமல் இருக்க எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவசியம்.
சொல்லவந்த சேதி என்னவென்றால் நட்பை நாம் இயல்பாய் வளர்க்கிறோமா இல்லை அவசியத்திற்கு மட்டும் வாங்கி கொள்கிறோமா.
இந்த எழுத்து தளத்தில் நான் வந்த நாளில் இருந்து ஒன்றை மட்டும் உன்னிப்பாய் கவனிக்கிறேன்.
திறமையான பலர் சரியாக அடையாளம் காணப்பட வில்லை.முழுவதுமாய் அடையாளம் காணப்படவில்லை என்று சொல்ல முடியாது.
ஆதங்கம் இதுவே எத்தனை பேரின் கவிதைகள் பலரால் பார்க்காமல் கூட நிராகரிக்க பட்டு உள்ளது.
நானும் வந்த தருணத்தில் என் கவிதைகளை எல்லோரும் பார்க்க வேண்டும் என அழைப்பு விட்டு உள்ளேன்.அது தவறு என்று அன்று தோன்றவில்லை.
ஆனால் ஒவ்வொரு கவிதைக்கும் அதே அழைப்பை நான் விட முடியாது.அதில் என் திறமை உண்மையாய் வெளி வர வாய்ப்பு இல்லை.
என் நிராகரிக்க பட்ட பல கவிதைகள் என் கவிதையே. அதற்கு உரிய பலன் வேறு எங்கோ நிச்சயம் கிடைக்கும்.என் போல் உள்ள பலருக்கும் அதை தான் சொல்ல விரும்புகிறேன்.
தவறு என் மீதும் உள்ளது நான் பலர் கவிதைகளுக்கு கருத்து தெரிவிப்பது இல்லை அதற்கு காரணம் என் பணியின் காரணமாய் அதிக நேரம் செலவிட வில்லை.ஆனால் நான் பார்க்கும் தரமான கவிதைகளை நான் பாராட்டுவேன்.
பரிசு என்பது முற்று புள்ளி என்றால் அதை தொட்டு விட்டேன் ஆனால் அது தான் ஆரம்பம்.
இதை எழுத வேண்டிய அவசியம் வந்ததற்கு காரணம் நேற்று நான் எழுதிய கவிதைக்கு பார்த்தவர் எண்ணிக்கையே குறைவு.ஆனால் அதற்கு பிறகு எழுதிய பலரின் கவிதையை பார்த்தவர் எண்ணிக்கை அதிகம்.
அதற்காய் அவர்களை குறை கூறவில்லை இது
நாம் கருத்து தெரிவித்து கருத்தை பெறுகிறோம்
என்பதை தான் உணர செய்கிறது.
ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது வணிகம்.
அது தான் இங்கும் நடக்கிறது.கலையும் கலைஞனும் விலை போக கூடாது.
நடுநிலையாளர் என்பதின் பொருள் பொதுவாய் இருப்பது தான்.ஆனால் அப்படியும் இங்கே இல்லை.
என் கவிதைகளை ரசிக்கும் பலருக்கும் என் மனமார்ந்த நன்றி ஆனால் இது என் மன ஆதங்கமாய் பதிவு செய்ய வில்லை நானும் அதே தவறை செய்கிறேன் என்று தான் குறிப்பித்து உள்ளேன்.
இது பல திறமையான வளரும் தலைமுறைக்கு ஆபத்து.நட்பு அவசியம் தான் ஆனால் கவிதை தேர்வுக்காய் மட்டும் நட்பு என்பது அவசியமா?