காதலா நட்பா

பிள்ளை பராயத்தில் பிரியாத நன்பனை
காலன் கவர்ந்திட கண்மறைந்த நேரம்
கனத்தது இதயம் கடந்தது காலம்
பிரியாத நிழலை விழியில் தெறித்திடும் உன் உரு -என் நேரம்

சிமிட்டாது விழிகள் தொலைவிலேயே
உள் வாங்கியது உன் உரு என்ன ஓர் அதிசயம்!
உன்னால் கூட அறிமுகம் அற்ற
ஓர் பார்வை பார்க்க முடியுமா?

சட்டென விழித்தது இதயம்
மீண்டும் தலை திருப்பி உறுதி செய்தது - உன்னாலே
எப்படி சாத்தியம்? நீ தானா ?
ஓ! உன் போல் வேறொருவனா?

நாளாந்தம் நீயும் கடக்க நானும் கடக்க
பார்வைகள் மட்டும் தொடர....
கேள்விகள் தொடர்ந்தது விடையில்லாது - ஆனால்
உன் பார்வையில் மட்டும் மாற்றம்
பரிச்சயமானது என்னை உனக்கு.

உன்னை அறியாது உன்னக்காக நான் உருக
உருண்ட காலத்தில் உன்னை காணாது கண்கள்
தேடியது. காரணமும் தெரியாது அறிவதற்கு
உன்னை பற்றியும் தெரியாது

தவிப்புடன் தனித்திருக்க
தற்செயலாய் ஓர் இடத்தில் உன் படம்
அதிர்வுடன் ஏற்றது என் கரம்
அலறியது மனம், முகத்தில் மட்டும் புன்னகை

"திருமணத்திற்கு அவசியம் வருகிறேன்"
என்ன பயன் உன்னை அறிந்தேன்
என் தோழியின் கணவனாக நீ....
மறைந்த என் நண்பனின் மறையாத நிழல் நீ

என்றோ மறைந்த என் நண்பன்
மறையாத நிழலாய் இனி என்றுமே நீ.

எழுதியவர் : krish (3-Apr-14, 8:23 pm)
பார்வை : 213

மேலே