தலைவர்னா சும்மாவா
"நம்ம தலைவரு ரொம்ப வெவரமாத்தான் கட்சிக்கு சின்னத்தை தேர்ந்தெடுத்து வச்சுருக்காரு"
"அப்படி என்ன சின்னம்?"
" 500 ரூபா நோட்டுதான் சின்னம்!"
"என்னய்யா சொல்ற..?!"
"அட ஆமய்யா... அப்பத்தான் போஸ்டர பாக்கும்போதெல்லாம் மக்களுக்கு வேற கட்சி ஞாபகமும் வராது.... ஓட்டு போடும்போதும் மக்களோட கை தன்னாலேயே நம்ம கட்சி சின்னத்துல போய் விழுந்துரும்.... எப்படி நம்ம தலைவரு யோசனை!"
"அடாடாடா....தலைவருன்னா தலைவர்தான்யா..."