நீலநிற கடற்கரை
வானத்தை பிரதிபலிப்பதால் நீலநிறம்
கொண்டாயோ???? கடலே
நீ காதல் கொண்டதால் காதலர்க்கு
கரையை கடன் கொடுக்கிறாயோ ?????????
நுரை தன் தரை தீண்டுமுன்
திரண்டுவந்த அலையினை நீ
அழைத்துக் கொள்வதேன்????????
அலையினை அணைக்கவரும்
அனைவரையும் அன்புடன் அரவணைக்கத்தான்
ஆயுள் கொண்டாயோ ??????
எத்துணை எத்துணை காட்சிகள்.......
இத்துணையும் கசக்காமல் எப்படி
காவியமாக்குகிறாய் உன்னுள் ????
வியக்கத்தக்க உன்னை விஞ்ச
விஞ்ஞானம் போதாது ........
பல்சுவை பண்டமும் படர்ந்து
நிற்கும் பாமர மக்களும்
மிதந்து வரும் படகுகளும்
மீன்பிடி தொழில்களும்
தோளோடு சாயும் தோழர்களும்
காதோடு கதைபேசும் காதலர்களும்
சித்திரம்போல் சிரித்து விளையாடும்
சிறார்களும் வாழ்வை வாழத்
துடிக்கும் வயோதிகர்களும்
திரண்டு நிற்கும் தெவிட்டாத
தேவலோகம் தான் நீலநிறக் கடற்கரை