விதியின் விளையாட்டு16
ரிஷானியின் அம்மா அழைக்கவே இருவரும் கீழே சென்றனர்.
அங்கு மனோஜ்,ஷிவானிக்கு திருமணம் பற்றிய பேச்சு நடைபெற்றுக்கொண்டிருந்தது.........!
இன்னும் சிறிது நாட்களில் ஷிவானிக்கு பரீட்சை எல்லாம் முடிந்துவிடும், ரிஷானிக்கும் முடியும் மனோஜும் ப்ரீ நம்மளும் ப்ரீ.....அதனால ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சயதார்த்தத்தை முடித்து விட்டு திருமணத்திற்கும் நாள் குறிப்பிடலாம் என்று இரு வீட்டாரும் பேசி முடித்தனர்.....!
அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்த மனோஜ் வீட்டார் ஷிவானிக்கு பூ வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினர்.........
கிளம்பும் போது ஷிவானியை விடவும் ஒருமுறை கூட ரிஷானியை தான் ரசித்து விட்டு சென்றனர் 2பேரும் மனோஜைத்தவிர....
அவர்கள் கிளம்பியது அப்பா அம்மா ஹாலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர்.
ஷிவானி,ரிஷானியுடன் அவள் தோழியும் மறுபடியும் மொட்டை மாடிக்கு சென்றனர்.
மொட்டைமாடிக்கு சென்றதும் "அக்கா அக்கா......என்று ரிஷானி, ஷிவானி கட்டியணைத்து அழுதாள்.............
என்னடி அழாத! என்று தட்டி கொடுத்தாள்.
இல்லை அக்கா அன்னிக்கு நீ மட்டும் என்னை ஊக்குவித்து பேசவில்லை என்றால் நான் மதனிடம் காதலை சொல்லிருக்கவே மாட்டேன்.......
ஆனால் இன்று...,,,,,,,,என்று அழுதாள்.
இன்று என்ன ஆச்சி?என்றாள்????
நான் காதலை சொன்ன பிறகு ஒருமுறைகூட இன்னும் அவனை பார்க்கவில்லை அதற்குள் மறுபடியும் அந்த பெண்ணால் பிரச்சனை என்று சொல்லி அழுதாள்..........
சரி! அழாதடி!!!! என்ன மேட்டர்? என்றாள்,,,,
நடந்த விஷயத்தை சொல்லி மதன் போன் அட்டண்ட் பண்ணாத விஷயத்தையும் சொன்னாள்.......
சரி கவலை படாதே மீண்டும் முயற்சி செய் அட்டன்ட் பண்ணுவான் என்று செல்போனை எடுத்து கையில் கொடுத்தாள் ஷிவானி..............
------------------------------------------------------------------------------------
நிஷாவின் கவலையிலிருந்த மதனின் நினைவில் ரிஷானியை எப்படி சொல்லி புரியவைப்பது....
நிஷா விஷம் குடித்தாள் என்றதும் இன்னும் ரிஷானியின் கோவம் அதிகருக்கும் என் மேல் எனென்றால் எற்கனவே நிஷாவை நானும் காதலிப்பதாக தவறாக புரிந்து கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்தாள் அதுவும் ஒரு சிறிய விஷயம்....!
ஆனால் இது அப்படியா?எவ்வளவு பெரிய விஷயம்! என்ன செய்வது என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு நெருப்பில் இதயத்தை சுட்டெரிப்பது போன்ற உணர்வு.........
கூடவே நிஷாவுக்கு ஏதாவது ஆச்சின்னா??????
ஐயோ!கடவுளே!எல்லா பழியும் என்மேலதானே நான் என்ன செய்ய என்று வருத்தத்தில் உறைந்தான்.......
போலிஸ் அதிகாரி வினோத்க்கு ஒரு போன் வந்தது,,,,,,,,,,,
"சார் நான் அன்னை மருத்துவமனையிலிருந்து பேசுறேன் அந்த விஷம் குடித்த பெண் கேஸ் விஷயமா தகவல் தர சொன்னீங்க இல்ல உடனே கிளம்பி வாங்க" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்தான் அவன்......
அன்னை மருத்துவமனையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது அந்த போலிஸ் ஜீப்.......!
பல யோசனையிலிருந்த மதனின் மனம் அவனிடமில்லாமல் இருந்தது.
திடீரென தன் செல்போன் சிணுங்கியதும் சுய நினைவுக்கு வந்தான் மதன்.
போனில் வந்த அழைப்பு நம்பரை பார்த்ததும் ஒரு நொடி உறைந்து நின்றான் மதன்,,,,,,,,,,
விதி தொடரும்,,,,,,,