பொண்ண கடத்திட்டோம்ல-வித்யா

யாருமில்லாத சோலையின்
நடுவே நானும் அவளும்...
விரல்கள் மோதிரங்களை
பரிமாறிக்கொள்ள......
இதழ்கள் முத்தங்களை
பரிமாறிக்கொண்டன.....!

கனவுகளை வடிவமைத்து
கொண்டிருக்கும் போதே
லாவகமாக தொலைந்து போனேன்.....!

ஒரு காத தூரத்திற்கு
கண்ணுக்கெட்டிய தூரம்
வரை யாருமில்லை.......

அதற்கு அப்பால் இருக்கும்
யாருக்கும் கண்களோ காதுகளோ
இயக்கத்திலில்லை........

என் உதடுகளின் வழியே
அத்தனை கண்டங்களிலும்
பிரயத்தனம் செய்யும் போது

என் வடிவிழந்து
சுற்றளவெல்லாம் சுருங்கி
ஒற்றை புள்ளியில் பரவியிருந்தது.

கனவுப்பரப்பில் நிலநடுக்கம்
பத்து கோர முகங்கள்
என் முகமோ.....
நெருப்பை தொட்டவன்,
எறும்பு குழிக்குள் கால் வைத்தவன்
போல உருமாறியது...........

காது கேளாதோரும்
கண் தெரியாதோரும்
எனை கண்டந்துண்டமாக வெட்டி
காணாத பிணமாக்கி சென்றனர்......

கண் விளித்து பார்த்தேன்
அனிமேஷன் செய்யப்பட்ட
என் ஆன்மா இக்கவிதை
எழுதிக்கொண்டிருந்தது..........!




****************************************************************************
கல்யாண பெண்ணை கடத்த நெனச்சா
கனவு கூட இப்படித்தான் வரும்........!

எழுதியவர் : வித்யா (5-Apr-14, 4:55 pm)
பார்வை : 163

மேலே