நாங்கள் அப்படித்தான்
எங்க போயி
என்ன சொல்ல
என்ன காணோம்
எனக் குள்ள
பேய போல
வந்த புள்ள
சந்தம் தந்தா
நெஞ்சுக் குள்ள
வண்ணங் கள
கண்ணுக்குள்ள
கள்ளப் போல
வைச்ச புள்ள
மெல்ல மெல்ல
என்னைக் கிள்ள
மேகம் துள்ளும்
மண்ணுக் குள்ள
முன்னிரவு
என்னக் கொல்ல
பின்னிரவா
மின்னும் முல்ல
என்ன கிள்ளும்
பாட்டுக் கள
எட்ட நின்னும்
கொட்டும் க(லை)ல
உள்ளந் தீண்டி
போன புள்ள
ஜன்னல் வழி
வானத் துல
என்ன சொல்லி
நானும் அழ
நாங்க ஒண்ணு சேர
வழி யில்ல ......
கவிஜி