பிடித்தது

நினைத்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்ததை
சொர்க்கம் தோற்கும் என் தாய்மடி பிடிக்கும்!
தலையை தடவும் அவளின் விரல்கள் பிடிக்கும்!
அழுது கொண்டே அவள் மடியில் உறங்கப் பிடிக்கும்!
கூரையில் வழிந்தோடும் மழைநீரை பிடிக்கும்!
போர்வையை தேடும் மழைக்காலம் பிடிக்கும்!
இரவின் இருளில் தவளைகளின் அழுகை பிடிக்கும்!
ஒற்றையடி பாதையில் சைக்கிள் ஓட்ட பிடிக்கும்!
கூட்டாக உணவு உண்ணும் நண்பர்களை பிடிக்கும்!
ஏதுமில்லாமல் ஏழ்மையில் வாழ்வது பிடிக்கும்!

எழுதியவர் : (6-Apr-14, 9:30 pm)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : pidiththathu
பார்வை : 62

மேலே